வணிகம்

முதலீட்டுக்கு ஏற்ற சூழ்நிலையை இந்தியா உருவாக்கி உள்ளது: உலக வங்கி கூட்டத்தில் அருண் ஜேட்லி தகவல்

செய்திப்பிரிவு

முதலீட்டுக்கு ஏற்ற சூழ்நிலையை இந்தியா உருவாக்கி உள்ளது. இதன் காரணமாக அனைத்து துறைகளி லும் அந்நிய நேரடி முதலீடு கடந்த இரண்டு ஆண்டுகளாக உயர்ந்து வருகிறது என மத்திய நிதி அமைச் சர் அருண் ஜேட்லி உலக வங்கி யில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்.

உலக வங்கியின் 93-வது மேம்பாட்டு குழு கூட்டத்தில் ஜேட்லி பேசியதாவது: வெளிநாட்டு முதலீட்டு கொள்கைகளை பெரிதும் தளர்த்தி அனைத்து துறைகளிலும் முதலீட்டுக்கு ஏற்ற சூழல் இந்தி யாவில் உருவாக்கப் பட்டுள்ளது. விவசாயம், உற்பத்தி மற்றும் சேவை என அனைத்து துறைகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கடந்த இரு ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு 30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. உலகளவில் அந்நிய நேரடி முதலீடு அதிகம் செல்லும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 7-ம் இடத்தில் இருக்கிறது. தவிர வளர்ச்சிகாக பல திட்டங்கள், பருவ நிலை மாறுபாடு, அனைவரையும் உள்ளக்கிய வளர்ச்சிகாக பல நடவடிகைகள் எடுக்கப்பட்டுள்ளன. 15.3 கோடி குடும்பங்களுக்கு எல்பிஜி மானியம் நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன. உலகளவில் பெரிய பணம் பரிமாறும் திட்டம் இதுதான். பெட்ரோல், டீசல் மீதான மானியங்கள் நிறுத்தப்பட்டன. நிலக்கரி மீது கார்பன் வரி விதிக்கப்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டு சர்வதேச அளவி லான வளர்ச்சி 3.1 சதவீதமாகவும், 2016-ம் ஆண்டு 3.2 சதவீத மாகவும், 2017-ம் ஆண்டு 3.5 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த மந்தமான வளர்ச்சி காரணமாக கமாடிட்டிகளின் விலை சரிந்து வருகிறது. இதனால் சர்வதேச அளவில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை சரிந்துள்ளது.

உலக வங்கி மேம்பாட்டு நிதியை ஆண்டுக்கு 10,000 கோடி டாலராக உயர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சர்வதேச பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும்

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜேட்லி சர்வதேச செலாவணி மையத்தில் உரையாற்றினார். அங்கு அவர் கூறியதாவது:

வளர்ந்த நாடுகள் தங்களுடைய கொள்கைகளை வகுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். சர்வ தேச பொருளாதார நிலை மந்தமாக இருப்பதால் அவர்களுடைய முடிவு இதர சந்தைகளையும் பாதிக்கும்.

நிதி நெருக்கடி வராமல் தடுக்க தேவையான வலிமையான நடவடிக் கைகளை சர்வதேச செலாவணி மையம் எடுக்க வேண்டும்.

வளர்ந்த நாடுகள் குறைவான அல்லது எதிர்மறையான வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்யும் போது, ஒட்டுமொத்த சந்தையிலும் ஏற்ற இறக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT