பிரச்சினையில் இருக்கும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் போர்ட் டல்போட் ஆலையில் பணிபுரியும் 4,000 பேரைப் பற்றியே எனது எண்ணம் இருக்கிறது என்று அந்த நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சஞ்சீவ் குப்தா தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில் இங்கிலாந்து ஸ்டீல் துறையின் பிரச்சினை விரைவில் குறையாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லிபர்டி குழுமங்கள் தலைவர் சஞ்சீவ் குப்தா இதுதொடர்பாக மேலும் கூறியதாவது:
என்னுடைய மனதில் டாடாவின் போர்ட் டல்போட் ஆலையின் 4,000 பணியாளர்களைப் பற்றிய எண் ணமே அதிகம் ஓடிக்கொண்டிருக் கிறது. இதனால் என்னுடைய தூங்கும் நேரம் குறைந்துவரு கிறது. இந்த ஆலையை வாங்கு கிறோமா இல்லையா என்பதை விட இது கடினமாக கால கட்டம். அடுத்த சில வாரங்களுக்கு இதே அழுத்தம் இருக்கும் என்று நினைக்கிறேன். தற்போதைய பணியாளர்களுடன் இந்த ஆலையை வாங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருக் கிறோம். இந்த நிலையில் இது சாத்தியம் என்றே தோன்றுகிறது.
ஸ்டீல் துறையில் தேவையை விட அதிக உற்பத்தி இருக்கிறது என்பதுதான் முக்கிய பிரச் சினையே. சர்வதேச அளவில் இதே நிலையில் இன்னும் சில காலத்துக்கு தொடரும் என நினைக் கிறேன் என்றார். இவர் பஞ்சாபில் பிறந்தவர் கேப்ம்பிரிட்ஜ் பல் கலைக்கழகத்தில் படித்தவர்.