வணிகம்

வரி செலுத்துவோர் பட்டியல் வெளியீடு

செய்திப்பிரிவு

மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணை யம், நாட்டில் வரிசெலுத்துபவர்கள் பட்டியலை முதன்முறையாக வெளி யிட்டிருக்கிறது. பல்வேறு பிரிவுகளில் வரி செலுத்துபவர் கள் தாக்கல் செய்த வருமான வரி படிவங்கள், பான் எண் வைத்திருப்பவர்கள் போன்ற தகவலையும் வெளியிட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்களை வெளியிடுவதன் மூலம் தனிப்பட்ட முறையிலும் நிறுவனங்களுக்கும் வருமான வரி தகவல் பற்றி ஆய்வு செய்வதற்கு உதவியாக இருக்கும் என்று மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையம் கூறியுள்ளது.

முதல்முதலாக 84 பக்க அறிக்கையை மக்கள் பார்வைக்கு மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது. பொருளாதார நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மக்கள் பார்வைக்கு இவற்றை வைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவந்தனர். தற்போது நேரடி வரிவிதிப்பு ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT