வணிகம்

பணிபுரிய சிறந்த நிறுவனம் கூகுள்

செய்திப்பிரிவு

பணிபுரிவதற்கு சிறந்த நிறுவனங் கள் பட்டியலில் கூகுள் முதலிடத்தை பிடித்துள்ளது. ராண்ஸ்டட் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் பணிபுரிவதற்கான சிறந்த நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டி யலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலிடத்தை கூகுள் நிறுவனம் பிடித்துள்ளது.

இதன் மூலம் 2016-ம் ஆண்டிற் கான ராண்ஸ்டட் விருதை கூகுள் நிறுவனம் பெறுகிறது. பிரிவு வாரி யாக சிறப்பு விருதுகளும் அறிவிக் கப்பட்டுள்ளன. பணிபுரிவதற்கான சிறந்த ஐ.டி நிறுவனத்திற்கான விருதை டெல் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. நுகர்வோர் எலெக்ட் ரானிக்ஸ் நிறுவனங்களில் சாம்சங் நிறுவனமும் இ-காமர்ஸ் நிறுவனங் களில் அமேசான் நிறுவனம் விருது களைப் பெற்றுள்ளன. உலக முழு வதும் உள்ள 2,00,000 பேர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் குறித்து ராண்ஸ்டட் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மூர்த்தி கே உப்பலுரி பேசுகையில், “இன் றைக்கு வேலை வாய்ப்பு துறை யில் நிலவும் மிக கடுமையான போட்டியில், சிறந்த திறமைசாலி களைப் பணியில் அமர்த்துவது, அவர்களை தக்க வைத்து கொள்வ தோடு, அவர்களை அப்பணியில் முழு அளவில் ஈடுபடுத்துவது என்பதன் மூலமாகவே ஒரு நிறுவனம் வளர்ச்சி காணமுடியும்.

மேலும் ஒரு நிறுவனம் மிகச் சிறந்த திறமைசாலிகளைக் கவர்ந் திழுக்கும் திறனைப் பெற்றிருந் தால், அதன் செயல்பாடுகள் அருமையாக அமைவதுடன் அதன் வளர்ச்சியும் அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. நிறுவனங்கள் தகுதி வாய்ந்த திறமைசாலிகளை பணிக்கு அமர்த்துவதற்கு சிறப் பான சூழ்நிலையை உருவாக்கி னால் பணியாளர்கள் தங்களை நிறுவனங்களுடன் இணைத்துப் பார்க்க அது வலுவான காரணமாக அமையும்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT