வணிகம்

சீன பால் இறக்குமதி தடை மேலும் நீடிப்பு

செய்திப்பிரிவு

மத்திய அரசு சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பாலுக்கு மேலும் ஒரு வருடம் தடை விதித்திருக்கிறது. அடுத்த வருடம் ஜூன் வரை இந்தத் தடை நீடிக்கும்.

சீனாவில் இருந்து வரும் பால் மற்றும் பால்சார்ந்த பொருட்களான சாக்லேட் உள்ளிட்ட அத்தனை பொருட்களுக்கும் 2015 ஜூன் மாதம் 23 வரை தடை விதிக்கப்படு கிறது என்று டி.ஜி.எஃப்.டி.யின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த தடை ஜூன் 23-ம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்தத் தடை கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பரிலிருந்து அமலில் இருக்கிறது. மெலமைன் என்ற வேதிப்பொருளை பயன்படுத்தி பாக்கிங் செய்யப்படுகிறது மேலும் உரம் தயாரிக்கவும் மெலமைன் பயன்படுத்தப்படுகிறது. இதுதான் இந்தத் தடை விதிப்புக்குக் காரணமாகும்.

சீனாவிடமிருந்து இந்தியா எந்த விதமான பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வ தில்லை.

கடந்த நிதி ஆண்டின் இந்தியா வின் பால் உற்பத்தி 140 மில்லியன் டன் இருக்கும் என்று கணிக்கப் பட்டிருக்கிறது. உலகில் அதிக அளவில் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது.

மாநில அளவில் எடுத்துக்கொண் டால் உத்திர பிரதேசம் அதிகளவில் உற்பத்தி செய்கிறது.

SCROLL FOR NEXT