வணிகம்

மொத்தமாக கொள்முதல் செய்யும் நிறுவனங்களுக்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மொத்தமாக கொள்முதல் செய்யும் நிறுவனங்களுக்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா–உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச அளவில் கச்சாஎண்ணெய் விலை 40% அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மொத்தமாக டீசல் வாங்கும்நிறுவனங்களுக்கு டீசல் விலைலிட்டருக்கு ரூ.25 அதிகரிக்கப்பட் டுள்ளது. ஆனால், பெட்டோல் நிலையங்களில் டீசல் நிரப்பிக்கொள்ளும் சில்லறை வாடிக்கையாளருக்கு விலை உயர்வு இல்லை.

இதனால், போக்குவரத்துக் கழகங்கள், நிறுவனங்கள் கடும்நெருக்கடியை எதிர்கொண்டுள் ளன. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தினமும் 15 லட்சம் லிட்டர் டீசல் கொள்முதல் செய்து வருகிறது. விலை உயர்வால் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படும்சூழலுக்கு அது தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல்வேறுநிறுவனங்கள் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து மொத்தமாக டீசல் கொள்முதல் செய்வதற்குப் பதிலாக, பெட்ரோல் நிலையங்களில் சென்று வாங்கிக்கொள்கின் றன. இதனால், பெட்டோல் நிறுவனங்களில் விற்பனை 5 மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தச் சூழலால் எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகின்றன. இறுதியாக கடந்த ஆண்டு நவம்பர் 4-ம் தேதி சில்லறை வாடிக்கையாளருக்கு டீசல் விலை குறைக்கப்பட்டது. அதன் பிறகு விலை உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், ஜியோ – பிபி, ஷெல்,நயரா எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் அதன் பெட்ரோல் நிலையங்களை மூட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SCROLL FOR NEXT