ஏற்றுமதியை அதிகரிக்க நாட்டி லுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (எஸ்இஇஸட்) மறு சீரமைக்கப்படும் என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை களின் ஒரு பகுதியாக பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் ஒழுங்கு முறை அமைப்புகளுடனும் பேசி வருவதாகவும் குறிப்பிட்டார்.
புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற வர்த்தக வாரியத்தின் (BOT) கூட்டத்தில் பேசிய அமைச்சர் இதைக் குறிப்பிட்டார். மேலும் அவர் பேசியதாவது:
ஏற்றுமதியை அதிகரிக்க பல்வேறு நிலைகளில் நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சிறப்புப் பொருளாதார மண்டலங்களை மறு சீரமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
ஏற்றுமதி மேற்கொள்வதற்கு ஏற்ப தொழில் துறையினருக்கு முன்னுரிமைக் கடன் வழங்குவது, சிறு ஏற்றுமதியாளர்கள், இயற்கை முறையிலான உணவு பொருள் ஏற்றுமதி செய்பவர்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்றார். மேலும் இந்தியர்கள் சர்வதேச அளவில் ஏற்றுமதி மேற்கொள்வதற்கேற்ப சிறப்பான ஒருங்கிணைப்பு பணிகள் மேற் கொள்ளப்படும். எக்ஸிம் பேங்க் மற்றும் ஏற்றுமதி கடன் உத்திரவாத வங்கி (ECEG) நடைமுறைகளில் தளர்வான அணுகுமுறை கடைப் பிடிப்பது உள்ளிட்ட நடவடிக் கைகள் எடுக்கப்படும்.
இது போன்ற நடவடிக்கை களுக்காக இதர அமைச்சகங்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளுடன் பேசி வருவதாகவும், விரைவில் இவை நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.