இரும்பு உருக்கு துறையில் ஈடுபட்டுள்ள லிபர்டி ஹவுஸ் நிறுவனத்தின் நிறுவனர். லிபர்டி காமாடிட்டிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
சர்வதேச அளவில் சுரங்கம் மற்றும் உருக்கு துறையில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. லண்டன், துபாய், சிங்கப்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. 30க்கு மேற்பட்ட நாடுகளில் அலுவலகம் வைத்துள்ளார்.
இவரது நிறுவனம் ஆண்டுக்கு 60 லட்சம் மெட்ரிக் டன் உருக்கை கையாள்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர். தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.
டிரினிடி கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் மேலாண்மையியல் பட்டம் பெற்றவர். கல்லூரி படிக்கும்போதே காமாடிட்டி வர்த்தகத்தில் இறங்கினார்.
உலோக உற்பத்தி, நிதித் தீர்வுகள், சரக்கு போக்குவரத்து போன்றவற்றில் வல்லுனர். சரக்கு கப்பல் போக்குவரத்து, மின் உற்பத்தி, நிலக்கரி சுரங்க தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள டாடா உருக்கு ஆலைகளை வாங்க திட்டமிட்டுள்ளார்.