வணிகம்

ஒரே நாளில் 3,855 டன் சரக்குகளைக் கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை

செய்திப்பிரிவு

சென்னை: ஒரே நாளில் 3,855 டன் சரக்குகளைக் கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை படைத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை துறைமுகம் மார்ச் 7-ம் தேதியன்று, ஒரே நாளில், 3,855 டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.

அதாவது 77,100 மூட்டை சரக்குகள் ஒரே நாளில் கையாளப்பட்டுள்ளது. இதற்குமுன் கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதியன்று ஒரே நாளில் 3,270 டன் அதாவது, 65,400 மூட்டை சரக்குகளை கையாண்டதே சாதனையாக இருந்து வந்தது.

தனது முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ள துறைமுக அதிகாரிகள், தனியார் கப்பல் நிறுவனம் மற்றும் பணியாளர்களுக்கு சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பலிவால் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT