உத்தரப் பிரதேச மாநில அரசு ஜேபி குழுமத்துக்கு ஒதுக்கிய 25,000 ஏக்கரை திரும்ப பெற்றது.
உத்தரப் பிரதேச மாநிலம் சோனபத்ரா மாவட்டத்தில் சிமெண்ட் ஆலை அமைப்பதற்காக ஜேபி குழுமத்துக்கு 25,000 ஏக்கர் நிலத்தை 1980-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநில அரசு ஒதுக்கியது. ஜேபி குழுமத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சட்டவிரோதமாக சுரங்கதொழிலில் ஜேபி குழுமம் ஈடுபட்டு வருவதாக கூறிய உத்தரப் பிரதேச வனத்துறை இந்த இடத்தை திரும்ப பெறவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் உத்தரப் பிரதேச மாநில அரசு ஜேபி குழுமத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை திரும்ப பெற்றுக் கொள்வதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் 7.8% வளர்ச்சி: நொமுரா
நடப்பாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.8 சதவீதமாக இருக்கும் என்று நொமுரா நிறுவனம் கணித்திருக்கிறது. 7வது சம்பள கமிஷன், பருவமழை, மத்திய அரசின் முதலீடுகள், நகர்ப்புற தேவை உயர்வு ஆகிய காரணங்களால் வளர்ச்சி உயரும் என்று இந்த நிறுவனம் கூறியிருக்கிறது.
இந்த வருட தொடக்கத்தில் பொருளாதார செயல்பாடுகள் மேம்பட்டு வருகிறது. நடப்பாண்டில் ரிசர்வ் வங்கியின் கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது. பணவீக்கம் குறைந்திருந்தாலும், அதிக கச்சா எண்ணெய் விலை, ரூபாய் சரிவு ஆகிய காரணங்களால் வட்டி விகிதம் இந்த ஆண்டில் குறைக்க வாய்ப்பு இல்லை என்று நொமுரா கணித்திருக்கிறது.