வணிகம்

30 கோடி ரூபாய் முதலீடு திரட்டியது வெரிடாஸ் ஃபைனான்ஸ்

செய்திப்பிரிவு

சிறு குறு தொழில்களுக்கு கடன் வழங்கும் சென்னையைச் சேர்ந்த வெரிடாஸ் ஃபைனான்ஸ் நிறுவனம் ரூ.30 கோடி முதலீடு திரட்டியுள்ளது. இந்த நிறுவனம் 2015 நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. வங்கி அல்லாத நிதி சேவைக்காக ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்றுள்ளது. நிறுவனம் முதற்கட்டமாக முருகப்பா குழுமத்தின் முன்னாள் செயல் தலைவரான பி. சுரேந்திர பாயிடமிருந்து முதலீடு திரட்டியது. தற்போது இரண்டாம் கட்டமாக சர்வா கேபிடல் மற்றும் காஸ்பியன் இம்பாக்ட் அட்வைசர் நிறுவனத்திடமிருந்து ரூ.30 கோடி முதலீடு திரட்டியுள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது...

உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த பல்வேறு சிறு தொழில் நிறுவனங்கள் வியாபார வளர்ச்சிக்கும், விரிவாக் கத்துக்கும் நிதி மற்றும் கடன் தேவை களுக்கும் பல நெருக்கடிகளை சந்திக்கின்றனர். இந்த நிலையில் அவர்களது தொழில் அனுபவம் மற்றும் அவர்களின் தேவை உணர்ந்து வெரிட்டாஸ் பைனான்ஸ் நிறுவனம் நேரில் சென்று ஆய்வு செய்து அவர்களது நிதித் தேவை யை பூர்த்தி செய்யும். 10 லட்சம் வரை உடனடி கடன் வழங்க திட்டமிட்டுள்ளது. மளிகை, மருந்துகடை, ஹோட்டல்கள், பட்டரைகள் என சிறு தொழில் வணிகர்களுக்கு கடன் வழங்கப் படும் என்று கூறியுள்ளது.

SCROLL FOR NEXT