மும்பை: சென்செக்ஸ் 1050 புள்ளிகள் சரிந்து 54,052 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. நிஃப்டி 304 புள்ளிகள் சரிந்து, தற்போது 16,193 ஆக உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில தினங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன. இந்தநிலையில் இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவை சந்தித்தன.
சென்செக்ஸ் 1050 புள்ளிகள் சரிந்து 54,052 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. நிஃப்டி 304 புள்ளிகள் சரிந்து, தற்போது 16,193 ஆக உள்ளது
நிப்டி மிட்கேப் 100 இன்டெக்ஸ் 1.29 சதவீதம் சரிந்து, ஸ்மால் கேப் பங்குகள் 1.40 சதவீதம் சரிந்ததால், மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் எதிர்மறையான மண்டலத்தில் வர்த்தகமாகின.
இன்றைய வர்த்தகத்தின் தொடக்கநிலையில் நிப்டி ஆட்டோ மற்றும் நிப்டி ஆகியவை முறையே 2.52 சதவீதம் மற்றும் 1.86 சதவீதம் சரிந்து குறியீட்டெண் குறைவாக இருந்தது. இருப்பினும், நிஃப்டி மெட்டல் 0.57 சதவீதம் வரை உயர்ந்தது.
ஏசியன் பெயிண்ட்ஸ் பங்கு 5.18 சதவீதம் சரிந்து ரூ.2,723 ஆக இருந்தது. நிப்டி நஷ்டத்தில் முதலிடத்தில் இந்த நிறுவனம் இருந்தது. ஹீரோ மோட்டோகார்ப், மாருதி, ஆக்சிஸ் வங்கி மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் போன்ற நிறுவனங்களும் பின்தங்கியுள்ளன.