இந்தியாவின் தேவைக்கு தற்போ தைய 7.5 சதவீத போதாது, இந்தியா மேலும் வளர்ச்சியடைய முடியும் என்று மத்திய நிதிமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருக்கிறார். வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜேட்லி இவ்வாறு கூறி னார். மேலும் அவர் கூறியதாவது.
இந்தியாவின் ஏற்றுமதி சரிந்து வருவது கவலைக்குரியது. இந்தி யாவின் ஏற்றுமதி குறைவதற்கு சர்வதேச சூழலும் ஒரு காரண மாகும். அதே சமயத்தில் மத்திய அரசு சீர்த்திருத்தங்களைத் தொடர்ந்து செய்து வருகிறது. அதனால் வளர்ச்சி சீராக இருக் கிறது. தற்போதைய சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் 7.5 சதவீத வளர்ச்சி சிறப்பானதா என்று கேட்டால் சிறப்பானது என்று சொல்ல முடியும். ஆனால் அதே சமயம் போதுமானதா என்று கேட்டால் இன்னும் நாம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே என் பதிலாகும்.
எனக்கு மட்டுமல்லாமல் 7.5 சதவீத வளர்ச்சி என்பது மத்திய அரசு, பிரதமர் என யாருக்கும் திருப்தி அளிக்கவில்லை. இந்த சூழ்நிலையிலும் நம்மால் சிறப்பாக செயல்பட முடியும். பருவமழை சாதகமாக இருக்கும் என்ற கணிப்பு, கச்சா எண்ணெய் விலை குறைவு, சீர்த்திருத்த நடவடிக்கைகள் தொடர்வது உள்ளிட்டவை காரணமாக நாம் சிறப்பாக செயல்பட முடியும்.
பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து, சர்வதேச சூழல் சவாலாக இருந்திருக்கிறது. இந்தியாவுக்கு அந்த சூழல் உதவவில்லை என்றா லும் இந்தியாவின் பொருளாதார சூழல் மேம்பட்டு வந்திருக்கிறது. கடந்த 21 மாதங்களில் மோடி தலை மையிலான அரசாங்கம் முடி வெடுப்பதில், கொள்கைகள் வகுப் பதில் மற்றும் வெளிப்படைத் தன்மையில் சிறப்பாக செயல் பட்டு வருகிறது. இதுவரை பொரு ளாதார ரீதியில் எந்தவிதமான தவறான முடிவும் எடுக்கவில்லை என்று ஜேட்லி கூறினார்.