வங்கியில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாதவர்கள் பெயர்களை வெளியிடாவிட்டாலும் கடன் தொகை எவ்வளவு என்று பொது மக்களுக்கு வெளியிடலாமே என உச்ச நீதிமன்றம் ரிசர்வ் வங்கிக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
வங்கிகள் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கொடுத்து நிலுவையில் உள்ள கடன் குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி சீலிடப்பட்ட அறிக்கையாக தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. இந்த விவரங் கள் வெளியானால் கடன் கொடுத் தவர்களுக்கு சிக்கல் ஏற்படும் என்றால், இந்த விவகாரத்தில் கணிசமான தொகை சம்பந்தப் பட்டுள்ளதே என்று தலைமை நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி வழக்கறிஞர்கள் இந்த தகவல்கள் நம்பகத்தன்மையின் அடிப்படையில் பெறப்படுபவை, ரகசியதன்மை கொண்டவை, இவற்றை வெளிப்படையாக அறிவிப்பது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று குறிப்பிட்டனர்.
இந்த விவகாரம் முக்கியமல்ல, திருப்பி செலுத்தாத கோடிக் கணக்கான கடன் தொகையை அறிவிப்பதில் வேறு ஏதாவது ரகசியங்கள் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினர். மேலும் இந்த விஷயத்தில் நாம் வெளிப்படை யான விவாதம் நடத்துவோம் என்றும் கூறினர்.
இந்த விவகாரத்தை விரிவாக விசாரிக்க ஏப்ரல் 26 ம் தேதி ஆஜராகுமாறு பொது நல வழக்கு தொடுத்த மையம், இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, மத்திய நிதி அமைச்சகம் ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் வங்கிகளுக்கும், அவர்களது பணக்கார வாடிக்கை யாளர்களுக்கும் இடையேயான ரகசியக்காப்பு எத்தகையது என்றும், இது எந்த அளவுக்கு அவர்கள் பெயர்களையோ, அவர்கள் திருப்பிச் செலுத்தாத தொகையையோ வெளியிடவிடா மல் செய்கிறது என்றும் இது எப்படி நீதித்துறை உத்தரவையும் தடுக்கிறது என்பதையும் பெரிய அளவில் விரிவான விசாரணை நடத்துவோம் என்று உச்ச நீதிமன்றம் மேலும் தெரிவித்தது.
மத்திய அரசுக்கு சொந்தமான ஹட்கோவில் (HUDCO) சில நிறுவனங்கள் 40 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் இருந்தன. 2015ல் இந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பிரபாத் பூஷண் தலைமையிலான பொதுநல வழக்கு மையம் என்ற என்.ஜி.ஓ. அமைப்பு இது குறித்து செய்திருந்த மனுவின் மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளது. அதாவது வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாதவர் கள் பெயர்களையும், தொகை உள்ளிட்ட விவரங்களையும் வங்கி கள் வெளியிட வேண்டும் என்று இந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
முன்னதாக ரூ.500 கோடி மற்றும் அதற்கும் அதிகமாகக் கடன் வாங்கி திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் குறித்த பட்டி யலை ஆர்பிஐ வெளியிட வேண்டும் என நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
கடனை திரும்பச் செலுத்தாமல் இருப்பவர்களிடமிருந்து கடனை வசூலிக்க உறுதியான எந்த நடவடிக்கைகளையும் மேற் கொள்ளாதது ஆச்சரியமளிப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும் இந்த வாராக்கடன் பட்டியலை தேசிய அளவில் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தவிட்டுள் ளது.