நாடாளுமன்ற கூட்டு நிலைக்குழு திவால் சட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்துள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். மேலும் இந்தச் சட்டம் குறித்து நடை பெற்று கொண்டிருக்கிற பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த புதன்கிழமை வங்கித் துறையில் செயல்படாத சொத் துக்கள் குறித்த ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டத் தில் பேசிய போது இதனை தெரி வித்தார். மேலும் அவர் பேசியதா வது: வங்கிகளிடம் கடன் பெற்று அதைத் திருப்பி தர வழிகள் இருந்தும் திருப்பி செலுத்தா தவர்கள் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக திருப்பி செலுத்தாதவர்கள் என இருதரப் பினர் பிரச்சினைகளையும் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் குறுக்கீடு கள் இன்றி கடனை திரும்ப பெறும் வகையில் சர்பாசி சட்டம் மற்றும் டிஆர்டி சட்டம் ஆகியவை திருத்தம் செய்யப்படும்.
பொருளாதார மந்தநிலை காரணமாக கடனை திருப்பி செலுத்தாதவர்கள் இருக்கிறார்கள். மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ள ஸ்டீல், டெக்ஸ்டைல், மின்சாரம் போன்ற துறைகளை புதுப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கடன் பெற்று உரிய தவணையை ஒருவர் செலுத்தாத போது அந்தக் கடனுக்கு உத்தரவாதம் அளித்தவர்கள் மீது வங்கிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆலோசனைக் குழுவிடம் கேட்டுக் கொண்டார். கடனுக்கு உத்தரவாதம் அளித்தவர்கள் மீது வங்கிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. சர்பாசி சட்டம், இந்திய ஒப்பந்த சட்டம், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் மீட்புச் சட்டம் ஆகிய சட்டங்களை பயன்படுத்தி உத்தரவாதம் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வங்கிகளின் மூலதனத்தை அதிகப்படுத்துவதற்கு கடந்த பட்ஜெட்டில் 25,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதேபோல் இந்த பட்ஜெட்டிலும் இதே அளவு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.