இந்திய மாம்பழம் இறக்குமதி விவகாரத்தில் விரைவில் தீர்வு எட்டப்படும் என்றும், விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை (CEPA) மேம்படுத் தும் பேச்சுவார்த்தை கூட்டத்தி லேயே இதற்கான தீர்வும் எட்டப்படும் என்று கொரிய குடியரசின் தூதர் சோ ஹூயன் தெரிவித்தார். மேலும் அனைத்தும் காத்திருந்தாலும் இந்திய மாம்பழங்கள் காத்திருக்காது என்று அவர் கூறினார்.
அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர் இதைக் குறிப்பிட்டார். இந்தியாவின் தேசிய கனியாக மாம்பழம் திகழ் கிறது. மாம்பழத்தின் சுவையில் நான் மயங்கி இருக்கிறேன். கொரியாவில் மாம்பழம் இறக்கு மதிக்காக ஏழு ஆண்டுகளுக்கு முன் சில முயற்சிகள் எடுக்கப் பட்டது என்றார்.
நான் இந்த விவகாரத்துக்கு தீர்வு காண விரும்புகிறேன். விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையிலேயே இதற்கான தீர்வும் காணப்படும் என்றார்.
விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் இரு நாடுகளிடையே ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத் துக்கான பாலமாக இருந்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தை மேம்படுத்துவது குறித்து ஜூன் மாதத்தில் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளதாகவும் ஹூயன் குறிப்பிட்டார்.