வணிகம்

ஏர்செல் அலைவரிசையை வாங்குகிறது பார்தி ஏர்டெல்

செய்திப்பிரிவு

எட்டு வட்டாரங்களில் உள்ள ஏர்செல் 4ஜி அலைவரிசையை வாங்க பார்தி ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதன் மதிப்பு 3,500 கோடி ரூபாய் ஆகும். இதற்கான ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் கையெழுத் திட்டுள்ளன. இந்த அலைவரிசை யை வாங்கும் பட்சத்தில் இந்தியா முழுக்க 4ஜி அலைவரிசையை வைத்திருக்கும் நிறுவனமாக ஏர்டெல் இருக்கும். தற்போது ரிலையன்ஸ் ஜியோ இந்தியா முழுமைக்குமான 4ஜி அலை வரிசையை வைத்துள்ளது.

பார்தி ஏர்டெல் மற்றும் அதன் துணை நிறுவனமான பார்தி ஹெக்சாகாம் ஆகிய நிறுவனங் கள் ஏர்செல் மற்றும் அதன் துணை நிறுவனங்களான டிஷ்நெட் வயர்லெஸ் மற்றும் ஏர்செல் செல்லுலார் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.

தமிழ்நாடு (சென்னையும் சேர்த்து), பிஹார், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், ஆந்திரப் பிரதேசம், ஒடிஷா மற்றும் வட கிழக்கு ஆகிய மாநிலங்களுக்கான அலைவரிசைக்கு ஒப்பந் தம் போடப்பட்டுள்ளது. ஏர்செல் நிறுவனத்தின் இந்த அலைவரிசை 2030-ம் ஆண்டு செப்டம்பர் வரை செல்லுபடியாகும்.

பார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த மாதம் வீடியோகான் நிறுவனத்தின் 6 வட்டாரங் களுக்கான 4ஜி அலைவரிசையை 4,428 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT