ரவி விஸ்வநாதன் 
வணிகம்

டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிர்வாக இயக்குநராக ரவி விஸ்வநாதன் பொறுப்பேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் (டிவிஎஸ் எஸ்சிஎஸ்) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ரவி விஸ்வநாதன் பொறுப்பேற்றுள்ளார்.

ரூ.15 ஆயிரம் கோடி வருமானம்ஈட்டும் டிவிஎஸ் மொபிலிடி குழுமத்தின் அங்கமாக இந்நிறுவனம் திகழ்கிறது. இந்நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டம் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. அதில் நிறுவனத்தின் புதிய இயக்குநராக ரவி விஸ்வநாதனை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. டிவிஎஸ் குழும நிறுவனங்களின் குடும்பத்தில் நான்காவது தலைமுறையைச் சேர்ந்த ஆர். தினேஷ் தொடர்ந்து நிறுவனத்தின் செயல் துணைத் தலைவராக பணியில் தொடர்வார்.

2020-ம் ஆண்டு நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநராக பணியில் சேர்ந்தவர் ரவி விஸ்வநாதன். தொழில்நுட்பத்தை பின்பற்றுவது மற்றும் குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்து சர்வதேச அளவில் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பணிகளை திறம்பட மேற்கொண்டதில் இவரது பங்களிப்பு மிக அதிகம்.

இந்நிறுவனத்தை உருவாக்கிய ஆர். தினேஷ், தொடர்ந்து உத்திசார் அடிப்படையிலான கையகப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வழிகாட்டுதலை வழங்குவார். சர்வதேச அளவில் விநியோக சங்கிலி சார்ந்த தீர்வுகளை அளிக்கும் இந்நிறுவனத்தில் 17 ஆயிரம் ஊழியர்கள் பணி புரிகின்றனர்.

SCROLL FOR NEXT