வணிகம்

விற்பனையில் அமேசான் நிறுவனம் முன்னணி

செய்திப்பிரிவு

இ-காமர்ஸ் துறையில் இந்தியா வின் இரண்டாவது பெரிய நிறுவன மான அமேசான் இந்தியா கடந்த மாதம் அதிக விற்பனையை கண்டி ருக்கிறது என்று தனியார் லாஜிஸ் டிக்ஸ் நிறுவனம் கணித்துள்ளது. இந்த கணிப்பின்படி அமேசான் இந்தியா நிறுவனத்தின் கடந்த மார்ச் மாத விற்பனை 21-24 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2015ம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 14 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முன்னணி இ-கா மர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் விற்பனை சரிந்துள்ளது. இந்த நிறுவ னத்தின் மார்ச் மாதம் விற்பனை 37 சதவீதமாக இருக்கிறது. 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனை 47 சதவீதமாக இருந்தது.

மேலும் ஸ்நாப்டீல் நிறுவனத்தின் விற்பனையும் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாத விற்பனை 19 சத வீதமாக இருந்தது. இது தற்போது 15 சதவீதமாக சரிந்துள்ளது.

அமேசான் நிறுவனம் ஸ்நாப்டீல் மற்றும் சிறிய இ-காமர்ஸ் நிறுவனங் களின் சந்தையை பிடித்துவருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆண்டில் புதிய நிறுவனங் கள் எதுவும் உருவாகவில்லை யென்றால் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரண்டு நிறுவ னங்களுக்குள் மட்டுமே போட்டி நிலவும். இன்னும் 6 முதல் 12 மாதங் களுக்கு சிறப்பாக செயல்படாத சூழ்நிலை நிலவினால் பிளிப்கார்ட் சந்தையையும் அமேசான் எடுத்து விடும் என்று ரிசர்ச் பாரஸ்டர் நிறுவ னத்தின் மூத்த ஆய்வாளர் சதீஷ் மீனா தெரிவித்துள்ளார்.

2015-ம் ஆண்டில் 1,600 கோடி டாலர் சந்தை மதிப்பில் இருக்கும் இந்தியாவின் ஆன்லைன் ரீடெய்ல் சந்தை 2020-ம் ஆண்டிற்குள் 11,900 கோடி டாலரை தாண்டும் என்று மார்கன் ஸ்டான்லி கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT