சென்னை: நீர் சுத்திகரிப்பு மற்றும் மேலாண்மை நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள விஏ டெக் வாபாக் நிறுவனம் நடப்பு நிதி ஆண்டில் டிசம்பருடன் முடிவடைந்த 9 மாதங்களில் ரூ.86 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபத்தை விட இது 35 சதவீதம் அதிகமாகும்.
மூன்று காலாண்டுகளில் நிறுவனத்துக்குக் கிடைத்த ஒப்பந்தப் பணியின் மதிப்பு ரூ.2,832 கோடியாகும். நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருமானம் ரூ.2,087 கோடியாகும். நிறுவனத்தின் கைவசம் உள்ள ஒப்பந்தப் பணிகளின் மதிப்பு ரூ.10,000 கோடியைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.