ரெபோ விகிதத்தை 0.25% குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி. இதன் மூலம் வீடு மற்றும் வாகன கடன் வட்டி குறையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் வாங்கும் கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி விகித மான ரெபோ விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளது. 2016-17 ஆண்டுக்கான முதல் ரிசர்வ் வங்கி கொள்கை நிர்ணயிக்கும் கூட்டம் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் மும்பை யில் நேற்று நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத் துக்குப் பின்னர் செய்தியா ளர்களை சந்தித்த ரகுராம் ராஜன் ரெபோ வட்டி விகிதம் குறைக் கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதன்படி ரிசர்வ் வங்கியிடமி ருந்து வங்கிகள் வாங்கும் கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டியான ரெபோ விகிதம் 6.75 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதமாகக் குறைக்கப் பட்டுள்ளது.
சிஆர்ஆர் எனப்படும் வங்கி களின் ரொக்க கையிருப்பு விகிதம் 4% என்கிற அளவிலேயே தொடர்கிறது. அதே நேரத்தில் வங்கிகளின் ரொக்க கையிருப் பின் தினசரி விகிதம் 95 சதவீதத்திலிந்து 90 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டிக் குறைப்பின் மூலம் மறைமுகமாக உற்பத்தி துறை செலவினங்கள் குறையும். மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உள்ள நெருக்கடிகள் மற்றும் வங்கிளுக்கு உள்ள இடர்பாடு (ரிஸ்க்) அளவும் ஓரளவுக்குக் குறையும் என்றும் ராஜன் குறிப் பிட்டார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் விவசாய உற்பத்திக்கும் முக்கிய பங்கு உள்ளது என்று குறிப்பிட்ட ராஜன், பருவநிலை சாதக மாக இருக்கிறபோது தேவைக் கேற்ப இருப்பை கையில் வைத்துக் கொள்ள முடியும். ஆனால் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் பருவ நிலைகள் மாற்றமைடைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
2016-17 நிதியாண்டில் பொரு ளாதார வளர்ச்சி 7.6% ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித் துள்ளது. உற்பத்தி நடவடிக் கைகள் குறைவாக இருப்பது மற்றும் கடன் வளர்ச்சி விகிதத்தில் பெரிய மாற்றம் இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் ரெபோ வட்டி விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பின்னர் ரெபோ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் அடிப்படை புள்ளிகளிலிருந்து 50 சதவீதத்தை ரிசர்வ் வங்கி குறைத்தது. 2015ம் ஆண்டில் மட்டும் ரிசர்வ் வங்கி 1.25 சதவீதம் வரை வட்டியை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகளின் அடிப்படையில் வங்கிகளுக்கு கூடுதல் அதிகாரமும், கூடுதல் லாபமும் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் வீடு, வாகன, தொழில் கடன் வட்டி குறைய வாய்ப்புள்ளது.
இதற்கிடையே இந்த வட்டிக் குறைப்பு நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள நிதியமைச்சர் அருண் ஜேட்லி பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் சிறந்த நடவடிக்கை என்று குறிப்பிட் டுள்ளார்.