புதுடெல்லி: ஏர்டெல் 4ஜி சேவை மும்பை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் வெகுவாக பாதிக்கப்பட்டதால், அதன் பயனாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
வெள்ளிக்கிழமை காலை முதல் மும்பை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் ஏர்டெல் 4ஜி - வைஃபை சேவை சில மணிநேரங்களுக்கு செயலிழந்ததால் இணையத்தை பயன்படுத்த முடியாமல் பயனாளர்கள் தவித்தனர்.
ஏர்டெல் 4ஜி சேவைகளில் ஏற்பட்ட இடையூறு குறித்து நெட்டிசன்கள் பலரும் சமூக ஊடகங்களில் புகார் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து ஏர்டேல் சேவையில் ஏற்பட்ட பாதிப்பு சரி செய்யப்பட்டது.
இதுகுறித்து ஏர்டேல் தரப்பில், “இன்று காலை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எங்கள் இணையச் சேவைகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டன. சேவைகள் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளன. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கிடையில் 4ஜி சேவை பாதிப்பு தொடர்பான மீம்ஸ்களும் இணையத்தில் வலம் வந்தன. அவற்றில் சில...
#AirtelDown
Me who never used Airtel pic.twitter.com/4ewp3lJhcO— Yuvraj Pratap Rao