வணிகம்

பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் நீரா ராடியா: முக்கிய தொழிலதிபர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது

ஐஏஎன்எஸ்

உலகை உலுக்கிக் கொண்டிருக் கும் பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் வைஷ்ணவி கம்யூனிகேஷன் நிறுவனர் நீரா ராடியா பெயர் இடம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. எட்டு வருடங் களுக்கு முன்பு 2 ஜி வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அமைச்சர்கள் உள்பட இந்திய அரசியல்வாதிகளுடன் இவர் பேசிய தொலைபேசி உரை யாடல்கள் வெளியிடப்பட்டு சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத் தக்கது. தற்போது இவர் பெயர் பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

உலகின் முக்கிய பிரபலங்கள் தங்களது சொத்து ஆவணங்களை பனாமாவைச் சேர்ந்த மொசாக் ஃபொன்செக்கா என்ற நிறுவனத் தில் பாதுகாத்து வந்தனர். இந்த நிறுவனத்திடம் இருந்த பிரபலங் களின் சொத்து பட்டியல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பட்டியலில் 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இடம் பெற்றிருந்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

தற்போது இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள நீரா ராடியா பிரிட்டிஷ் விர்ஜின் ஐலேண்ட்ஸில் உள்ள நிறுவனத்தின் மூலம் பணம் பதுக்கலில் ஈடுபட்டுள்ளதாக ``இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ செய்தி வெளியிட்டுள்ளது.

நீரா ராடியா பிரிட்டிஷ் விர்ஜின் ஐலேண்ட்டில் தனக்குச் சொந்த மான நிறுவனத்தை தொடங்கி யிருக்கிறார். சர்வதேச தொழில் நிறுவனமான கிரௌன் மார்ட் இண்டர்நேஷனல் குழுமம் என்ற பெயரில் பனாமாவில் உள்ள மொசாக் பொன்செக்காவில் 1994-ம் ஆண்டு இந்த நிறுவனத்தை பதிவு செய்திருக்கிறார். ஜூன் 2004-ம் ஆண்டு வரை அந்த நிறுவனத்தின் தீர்மானங்களில் அவர் கையெழுத் திட்டுள்ளார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

இது தொடர்பாக நீரா ராடியா அலுவலகத்திலிருந்து பதிலளிக் கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் மறைந்த அவரது தந்தை இக்பால் நரேன் மேனனால் தொடங்கப்பட் டது. இதில் நீரா ராடியா எந்தப் பயனையும் அடையவில்லை. மேலும் ராடியா இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் உள்ள அவருடைய பொறுப்புகள் மற்றும் சொத்துகளின் உரிமையிலிருந்து விலகி விட்டார் என்று பதிலளிக் கப்பட்டுள்ளது

நீரா ராடியா மட்டுமல்லாமல் பல முக்கிய தொழிதிபர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

உலகின் மிகப்பெரிய பணம் மற்றும் பத்திரங்கள் அச்சடிக்கும் நிறுவனமான டி லா ருயே (De La Rue) டெல்லி தொழிலதிபருடன் தொடர்பு வைத்திருந்ததாக செய்தி வெளிவந்துள்ளது. ஒப்பந்தங்கள் பெற்றுத்தருவதற்காக அவருக்கு 15 சதவீதம் கமிஷன் வழங்கப் பட்டுள்ளதாக பனாமா பேப்பர்ஸ் வெளியிட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.

பனாமா பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், வெளிநாட்டு நிறுவ னங்களுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்ததாக பனாமா ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள இந்தியர்கள் சட்டப்பூர்வமாக நடவடிக்கைகளை மேற்கொண் டார்களா? என்பது பற்றி விசாரணை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இந்த பட்டியல் தொடர்பாக உயர் நிலை விசாரணையை மேற் கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT