புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் பாஸ்டேகுகள் மூலம் இதுவரை 58 ஆயிரத்து 188 கோடியே 53 லட்சம் ரூபாய் சுங்கக் கட்டணமாக வசூலாகியுள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:
நாடு முழுவதும் 31 ஜனவரி 2022 வரை 4.59 கோடிக்கும் மேற்பட்ட பாஸ்டேகுகள் விநியோகிக்கப்பட்டு, தேசிய நெடுஞ்சாலைகளில் ஃபாஸ்டேகுகள் மூலம் இதுவரை 58 ஆயிரத்து 188 கோடியே 53 லட்சம் ரூபாய் சுங்கக் கட்டணமாக வசூலாகியுள்ளது.
ஜனவரி 2020 முதல் 5, பிப்ரவரி 2022 வரை ஃபாஸ்டேக் பயன்படுத்தும் 12.5 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடமிருந்து தவறாக வசூலிக்கப்பட்ட தொகை திருப்பி அளிக்கப்பட்டிருக்கிறது.
சுங்கக்கட்டண வசூல் மையங்களில் ஃபாஸ்டேக் மூலம் தவறாக கட்டணம் வசூலிக்கப்படுவதைக் குறைக்க, ஒழிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.