கடந்த நிதி ஆண்டில் பங்குசந்தை முதலீடுகள் மூலமாக பொதுத் துறை நிறுவனமான எல்ஐசிக்கு 11,000 கோடி ரூபாய் லாபம் கிடைத் திருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் லாபத்தை எடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது, அதன் மூலம் 11,000 கோடி லாபம் ஈட்டினோம் என்று எல்ஐசியின் முதலீட்டு பிரிவு செயல் இயக்குநர் பிரவீண் குதும்பே தெரிவித்தார்.
கடந்த நிதி ஆண்டில் 2.70 லட்சம் கோடி ரூபாயை இந்திய சந்தை யில் முதலீடு செய்தோம். இதில் பங்குச்சந்தையில் 65,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார். வங்கி துறையில் கூடுதலாக முதலீடு செய்ய வாய்ப்பு கிடைத் திருக்கிறது என்று கூறியவர் எதிர்கால சந்தை நிலவரம் குறித்து கருத்து கூற மறுத்துவிட்டார்.
இந்திய ரயில்வே துறையில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு செய்ய எல்ஐசி திட்டமிட்டிருந்தது. இதில் ரு.7,000 கோடியை கடந்த நிதி ஆண்டில் கடனாக கொடுத்தது.
கடந்த நிதி ஆண்டில் (2014-15) 55,000 கோடி ரூபாயை எல்.ஐ.சி. பங்குச்சந்தையில் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த இடைப்பட்ட காலத்தில் (2015-16) பங்குச்சந்தைகள் 10 சதவீதம் சரிந்திருக்கின்றன. 30 பங்குகள் உள்ள சென்செக்ஸ் பட்டி யலில் 23 பங்குகளில் எல்.ஐ.சி. முதலீடு செய்திருக்கிறது.