வணிகம்

தொடரும் சிக்கல்: பேடிஎம் நஷ்டம் 3-வது காலாண்டில் ரூ.778 கோடியாக உயர்வு

செய்திப்பிரிவு

மும்பை: பேடிஎம் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு முடிவு வெளியாகியுள்ளது. இதில் இந்நிறுவனத்தின் மொத்த நஷ்டம் ரூ.778.5 கோடி அதிகரித்துள்ளது.

டிஜிட்டல் நிதி சேவையில் முன்னணி நிறுவனமாக பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடந்த நவம்பர் 8-ம் தேதி அன்று பங்கு வெளியிட்டது.

பங்கு வெளியிடப்பட்டு நவம்பர் 10-ம் தேதி அன்று முடிவடைந்தது. இதன் பங்கு ஒதுக்கீடானது நவம்பர் 15, 2021 அன்று செய்யப்பட்டது. இன்று பங்கு சந்தையில் அதன் பங்குகள் பட்டியலிடப்பட்டன.

பேடிஎம் ஒரு பங்கின் மதிப்பு 2,080 ரூபாய் முதல் 2,150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட இதன் விலை தொடக்கத்திலேயே சரிவைக் கண்டது. கடந்த ஆண்டின் மிக மோசமான பங்கு வெளியீடாக இது முடிந்தது.

இந்த நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு முடிவு வெளியாகியுள்ளது. இதில் இந்நிறுவனத்தின் மொத்த நஷ்டம் ரூ.778.5 கோடி அதிகரித்துள்ளது. இதே கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனம் 481.70 கோடி ரூபாய் நஷ்டத்தினையே கண்டிருந்தது. இதே கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 535 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்தது.

பேடிஎம் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் அதன் வருவாய் கடந்த ஆண்டினை காட்டிலும் 89% அதிகரித்து, 1456 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 772 கோடி ரூபாயாக இருந்தது.

நஷ்டம் குறித்து அந்நிறுவனம் கூறுகையில் குறைவான செயல்பாட்டுக் கட்டணங்கள், வியாபாரத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு அளிக்கப்படும் கேஷ் பேக் சலுகைகள், செலவினங்கள் நஷ்டத்திற்குக் காரணம் என தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT