மானியம் அல்லாத பொதுச் சந்தை விலையில் விற்பனை செய்யப் படும் எல்பிஜி சிலிண்டர் விலை ரூ. 4 குறைந்துள்ளது. அதேசமயம் விமான எரிபொருள் (ஏடிஎப்) விலை 8.7 சதவீதம் உயர்ந்துள்ளது. புதிய விலை நேற்று முதல் அமலுக்குவந்துள்ளது.
டெல்லியில் ஏடிஎப் ஒரு கிலோ லிட்டர் ரூ.3,371.55 உயர்ந்து ரூ.42,157.01 என்ற விலையில் விற்பனையானதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன.
கடந்த மார்ச் 10-ம் தேதி ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.515.85 குறைந்தது. அதற்கு முன்பு மார்ச் 1-ம் தேதி 12 சதவீதம் அதாவது ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.4,174.49 உயர்ந்தது. அதற்கு முன்பு பிப்ரவரி 1-ம் தேதி ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.4,765.50 குறைந்தது பின்னர் உயர்ந்தது.
மாநிலங்களில் விதிக்கப்படும் விற்பனை வரிக்கு ஏற்ப ஒவ்வொரு விமான நிலையத்திலும் ஏடிஎப் விலை மாறுபடும். ஏடிஎப் விலை ஏற்றம் விமான நிறுவனங்களை மேலும் நெருக்கடிக்கு தள்ளும்.
விலை உயர்வு குறித்து உடனடி யாக எந்த விமான நிறுவனமும் கருத்து தெரிவிக்கவில்லை.
எல்பிஜி சிலிண்டர்
மானியம் அல்லாத பொதுச் சந்தை விலையில் விற்பனை செய்யப்படும் சிலிண்டருக்கான விலை ரூ.4 குறைக்கப்பட்டு ரூ. 509.50-க்கு விற்பனையாகும். முன்னர் இது ரூ.513.50 என்ற விலையில் இருந்தது. தொடர்ந்து மூன்றாவது முறையாக சிலிண்டர் விலை குறைக்கப் பட்டுள்ளது.
கடந்த மார்ச் 1-ம் தேதி சிலிண்டருக்கு ரூ. 61.50 . அதற்கு முன் பிப்ரவரி மாதம் ரூ. 82.50 குறைக்கப்பட்டிருந்தது.
டெல்லியில் மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர் விலை ரூ.419.33 ஆக உள்ளது.
ஐஓசி, ஹெச்பிசிஎல், பிபிசிஎல் ஆகியன ஏடிஎப் மற்றும் எல்பிஜி விலையை ஒவ்வொரு மாதமும் முதல் தேதி மாற்றியமைக்கிறது. கடந்த மார்ச் 10-ம் தேதி ஏடிஎப் விலை மாற்றி அமைக்கப்பட்டதற்கு வரி விதிப்பே காரணமாகும்.