வணிகம்

இந்தியாவில் ஆண்டுக்கு 18.5 லட்சம் டன் மின்னணு கழிவு உருவாகிறது: அசோசேம் ஆய்வில் தகவல்

பிடிஐ

இந்தியாவில் ஆண்டுக்கு 18.5 லட்சம் டன் மின்னணு கழிவுகள் உருவாகிறது என்று அசோசேம் ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக மும்பை மற்றும் டெல்லி நகரங்களிலிருந்து அதிகமான மின் னணு கழிவுகள் உருவாகின்றன என்று அந்த ஆய்வு குறிப்பிட் டுள்ளது. இதன் வளர்ச்சி ஆண்டுக்கு 25 சதவீதமாக இருக்கும் என்றும், 2018-ம் ஆண்டுக்குள் 30 லட்சம் டன் என்கிற அளவைத் தொடும் என்றும் அந்த ஆய்வு கூறியுள்ளது.

இந்தியாவில் மின்னணு கழிவு களை உருவாக்குவதில் மும்பை முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 1,20,000 மெட்ரிக் டன் கழிவு மும்பையில் உருவாகிறது. இதற்கு அடுத்து டெல்லி 98,000 மெட்ரிக் டன் கழிவுகளை உருவாக்குகிறது. பெங்களூரு 92,000 டன் கழிவுளை உருவாக்குகிறது. பாரஸ்ட் அண்ட் சுல்லிவான் என்கிற அமைப்புடன் சேர்ந்து அசேசேம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.

இந்த பட்டியலில் சென்னை 67,000 மெட்ரிக் டன், கொல்கத்தா 55,000 டன், அகமதாபாத் 36,000 டன், ஹைதராபாத் 32,000 டன் மற்றும் புனே 26,000 டன் கழிவுகளை உருவாக்குவதாகவும் கூறியுள்ளது.

மோசமான உள்கட்டமைப்பு, சட்டம் மற்றும் முறையான கட் டமைப்புகள் இல்லாத காரணங் களால் இந்தியாவில் 2.5 சதவீத மின்னணு கழிவுகள் மட்டுமே மறு சுழற்சி செய்யப்படுகின்றன என்று இந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த மின்னணு கழிவுகளால் இயற்கை வளங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றுசூழலை சீர் படுத்த முடியாத அளவுக்கு கேடு விளைவிக்கின்றன. மேலும் இந்த துறையில் ஈடுபட்டுள்ள தொழி லாளர்களின் உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்படுகின்றன என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

மின்னணு கழிவுகளில் 95 சத வீதத்தை அமைப்பு சாரா பிரிவினரும், குப்பை சேகரிப் பவர்களுமே கையாளுகின்றனர். இந்த மின்னணு கழிவுகளை அழிப் பதற்கு பதிலாக இதை மறுசுழற்சி செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

இந்தியாவில் பல்வேறு விதமான மின்னணு கழிவுகளை கையாளும் பணிகளில் எந்த பாதுகாப்பும் இல்லாமல் 10-14 வயதுக்குட்பட்ட 5 லட்சம் குழந்தைகள் ஈடுபட்டுள்ளனர் என்று அசோசேம் பொதுச் செயலாளர் டி எஸ் ராவத் குறிப்பிட்டார். மின்னணு குப்பை சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் எந்த விதமான அறிவியல் முறைகளையும் பின்பற்றாமல் இருப்பது கவலையளிப்பதாகும். பல்வேறு கதிரியக்க கழிவு களும் கவனக்குறைவாக கையாளப் படுகின்றன என்றார்.

குழந்தைகளை இந்த துறையில் ஈடுபடுத்துவதை நிறுத்த இதற்கு உறுதியான சட்ட வழிகளைக் காண வேண்டும் என்றும் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT