புதுடெல்லி: மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக டாக்டர் வி.ஆனந்த நாகேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்றே அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆனந்த நாகேஸ்வரன் அகமதாபாத் ஐஐஎம் நிறுவனத்தில் லேலாண்மை படிப்பில் முதுநிலை டிப்ளமோ பட்டமும், மாசூசட்ஸ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றவர். மேலும், எழுத்தாளர், ஆசிரியர், ஆலாசகர் என பன்முகம் கொண்டவர். இதற்கு முன், இந்தியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள தொழில் கல்லூரிகள் மற்றும் மேலாண்மை நிறுவனங்கள் பலவற்றில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஏராளமான புத்தகங்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.
ஐஎப்எம்ஆர் ஸ்கூல் ஆப் பிசினஸ் தலைவராகவும் , க்ரேயா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அதேநேரம், 2019 - 2021 வரை இந்தியப் பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலில் இவர் பகுதி நேர உறுப்பினராக இருந்த நிலையில் தான் தற்போது தலைமை பொருளாதார ஆலோசகராக அவரை மத்திய அரசு நியமித்துள்ளது.