பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இந்தியர்களுக்கு சம்மன் அளிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் வெளிநாடு களில் உள்ள கணக்குகள் தொடர் பாக அவர்களிடமிருந்து உறுதி மொழி வாங்கவும் முடிவு செய்துள் ளதாக இந்த விவகாரத்தை கையாண்டு வரும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் 500 இந்தியர்களுக்கு தொடர்பிருப்பதாக தகவல் வெளியானது. இந்திய தொழிலதி பர்கள் மற்றும் பாலிவுட் நடிகர்கள் பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் சம்பந்தபட்டிருப்பதாக தகவல் வெளியானது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டதாக சொல்லப்படும் பணம் இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதா அல்லது சட்டத் துக்கு புறம்பாக முதலீடு செய்ய பட்டுள்ளதா என அரசு ஆராய்ந்து வருகிறது என்றும் அவர் குறிப் பிட்டார். இந்த சம்மன் 2 மாதத் துக்குள் சம்பந்தப்பட்ட அனைவருக் கும் அனுப்பப்படும். சம்மந்த பட்டவர்களது பதில் முறையாக பதிவு செய்யப்படும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
அமலாக்கத்துறை மற்றும் நிதி அமைச்சகம் இந்த பண மோசடி விவகாரத்தை கையாண்டு வருகின் றன. இந்த விசாரணைக்கு தேவை யான ஆதாரங்களை வருமான வரித்துறை கொடுத்து வருகிறது.