புதுடெல்லி: வரும் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அரசு தயார் செய்து வருகிறது. இதுதொடர்பாக வெவ்வேறு துறையினர், தங்கள் துறை சார்ந்த தேவைகளை மத்திய அரசிடம் முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் ரத்தினங்கள் மற்றும் நகை ஏற்றுமதி கவுன்சில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. தற்போது 7.5 சதவீதமாக உள்ள தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 4 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் பட்டை தீட்டப்பட்ட வைரம் மீதான இறக்குமதி வரியை 7.5 லிருந்து 2.5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.
‘நகை ஏற்றுமதியில் இந்தியா ஐந்தாவது பெரிய நாடாக உள்ளது. வரி குறைக்கப்பட்டால் நகை ஏற்றுமதி துறை பெரிய அளவில் வளர்ச்சி காண உதவும்’ என்று நகை ஏற்றுமதி கவுன்சிலின் தலைவர் கொலின் ஷா தெரிவித்துள்ளார்.