வருங்கால வைப்பு நிதி அமைப்பு 1.18 கோடி நபர்களுக்கு கிளைம் நிதியை வழங்கியுள்ளது. இதில் 96 சதவீதம் நிர்ணயம் செய்யப்பட்ட 20 நாட்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக பிஎப் அமைப்பு தெரிவித்திருக்கிறது.
கடந்த 2015-16ம் நிதி ஆண்டில் மொத்தம் 1.18 கோடி நபர்களுக்கு கிளைம் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் 39% 3 நாட்களுக்குள்ளும் 79% கிளைம்கள் 10 நாட்களுக்குள்ளும், 96% கிளைம்கள் 20 நாட்களுக்குள்ளும் வழங்கப்பட்டிருக்கின்றன.
22,925 கோரிக்கைகள் பி.எப் தொடர்பாக வந்திருக்கின்றன. இதில் 95% கோரிக்கைகள் தீர்க்கப்பட்டு விட்டன. கடந்த நிதி ஆண்டின் இறுதி யில் 1,280 கோரிக்கைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.