வணிகம்

‘20 வருடங்களில் இந்தியா அதிக வளர்ச்சி அடையும்

செய்திப்பிரிவு

தற்போதைய வளர்ச்சி விகிதத்திலேயே அடுத்த 20 வருடங்களுக்கு இந்தியா இருக்கும். தாராளமயமாக்கலின் பலன் கிடைக்கும். ஏழைகளின் எண்ணிக்கை குறையும் என்று மெல்போர்னில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள முதலீட்டாளர்களிடம் பேசிய ஜேட்லி மேலும் கூறியதாவது. மத்திய அரசு பல விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் கவனம் செலுத்தி வருகிறது. அதனால் தற்போதைய 7.5 % வளர்ச்சி விகிதம் மேலும் உயரும். இந்த வளர்ச்சி விகிதம் அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளுக்கு இருக்கும்.

அனைத்துத் துறைகளும் முதலீட்டுக்கு ஏற்றவையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. முதலீடு செய்வதில் உள்ள நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. நிலையான கொள்கை வகுப்பதில் மத்திய அரசு அதிகம் கவனம் செலுத்துகிறது. வரி சீரமைப்புகள் செய்து வருவதால் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று அருண் ஜேட்லி கூறினார்.

SCROLL FOR NEXT