வணிகம்

இவரைத் தெரியுமா? - நெளஷத் போர்ப்ஸ்

செய்திப்பிரிவு

இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) தற்போதைய தலைவர். நீராவி பொறியியல் துறையை சார்ந்த முன்னணி நிறுவனமான போர்ப்ஸ் மார்ஷெல் நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளார்.

* அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங் பிரிவில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றவர்.

* ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் 1987-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை பேராசிரியராக பணியாற்றியவர்.

* இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் தேசிய உயர்கல்வி கமிட்டி உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

* கோத்ரேஜ் நிறுவனத்தில் எந்த பொறுப்புகளிலும் இல்லாத நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர். டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின் இயக்குநராவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

* மஹாராஷ்டிர மாநில தொழில் வர்த்தக கூட்டமைப்பின் துணைத்தலைவர் பொறுப்பில் பணியாற்றியவர்.

SCROLL FOR NEXT