வணிகம்

ஏர்செல் இணைப்பு பேச்சு வார்த்தையை நீட்டித்தது ஆர்காம்

செய்திப்பிரிவு

அனில் அம்பானி நடத்தி வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், ஏர்செல் மற்றும் எம்டிஎஸ் நிறுவனங்களை இணைக்க பேச்சுவார்த்தையை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியிருந்தது.

ஏர்செல் நிறுவனத்தின் நிறுவனர்களுடன் 90 நாள் ஒப்பந்தம் ஒன்றையும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் செய்திருந்தது. இந்த ஒப்பந்தங்களில் எந்தவிதமான பந்தமும் இல்லை. இந்த பேச்சுவார்த்தைகள் இணைப்பில் முடியவேண்டிய அவசியம் இல்லை என்றும் முன்னதாக ஆர்காம் தெரிவித்திருந்தது.

இப்போது இந்த கால அவகாசத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. மே மாதம் 22-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆர்காம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT