வணிகம்

தமிழில் சேவை தொடங்கியது ஜெரோதா

செய்திப்பிரிவு

இந்தியாவின் முன்னணி ஆன் லைன் பங்கு வர்த்தக நிறுவன மான ஜெரோதா தமிழில் கைட் (KITE) என்கிற வர்த்தக தளத்தை உறுப்பினர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. பெங் களூருவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனம் தென்னிந்திய அளவில் பங்குச் சந்தை வர்த்தகத்தில் மிக வலுவான இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் இந்த நிறுவனத்துக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், பிராந்திய சேவைகளை விரிவாக்கம் செய்வதற்கு ஏற்பவும் தமிழ் மொழியில் வாடிக்கையாளர்களுக்கான தளத்தை அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிதின் காமத் கலந்து கொண்டு பேசியதாவது.

முதலீட்டுக் கலாச்சாரத்தை ஊக்குவிக்க பிராந்திய மொழிகளில் சேவை அவசியம் என்பதை உணர்ந்து கைட் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். தமிழ் மொழி தவிர இந்தி, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, குஜராத்தி, ஒடியா, மராத்தி என பல மொழிகளிலும் கைட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து இந்திய மொழிகளுக்கும் சேவை கொண்டு வரப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் உள்ளூர் மொழியில் எந்த குழப்பமும் இல்லாமல் வர்த்தகத்தில் ஈடுபட முடியும் என்றார்.

இந்த நிறுவனத்துக்கு சென்னை மற்றும் சேலத்தில் கிளைகள் உள்ளன. தவிர மதுரை, கன்னியாகுமரி, ஓசூர், ஆம்பூர், ஈரோடு, கோவை, ஊட்டி, தருமபுரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி என 10 நகரங்களில் பங்குதாரர் சேவை மையங்கள் உள்ளன.

SCROLL FOR NEXT