வணிகம்

5/20 விதியில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு திட்டம்

செய்திப்பிரிவு

சமீபத்தில் விமான போக்குவரத்து துறையில் அதிக சர்ச்சையை உருவாக்கிய 5/20 விதியை மாற்றி அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

உள்நாட்டில் விமான போக்குவரத்தில் செயல்பட்டு வரும் நிறுவனம் வெளிநாடு களுக்கு இயக்க வேண்டும் என்றால் ஐந்து வருட அனுபவமும், 20 விமானங்களும் இருக்க வேண்டும் என்ற விதி (5/20) இருக்கிறது.

இதன் காரணமாக ஏற்கெனவே இருக்கும் விமான நிறுவனங்களுக்கும் புதிய விமான நிறுவனங்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டன. டாடா குழுமத்தில் இருந்து புதிதாக தொடங்கப்பட்ட ஏர் ஏசியா மற்றும் விஸ்தாரா ஆகிய நிறுவனங்கள் இந்த விதியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறது. மாறாக ஏற்கெனவே சில ஆண்டுகளாக இருக்கும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இந்த விதி தேவை என்று கூறிவருகின்றன.

அதனை தொடர்ந்து மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இது போன்ற கூட்டம் நடப்பது இது இரண்டாவது முறையாகும். இந்த கூட்டத்தில் 5/20 விதி உள்பட பல்வேறு விஷயங்கள் விவாதித்ததாகத் தெரிகிறது.

விவாதிக்கப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படவில்லை என்றாலும், தற்போது இருக்கும் விதிமுறைக்கு மாற்றாக புதிய விதிமுறை உருவாக்கப்படும் என்றே தெரிகி றது.

இந்த கூட்டத்தில் விமான போக்குவரத்து துறை அமைச் சர் அசோக் கஜபதி ராஜூ, மற்றும் சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வரைவு விமானப்போக்கு வரத்து கொள்கை கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியிடப் பட்டது. மத்திய விமானப்போக்கு வரத்து துறை இணை அமைச்சர் மகேஷ் ஷர்மா 5/20 விதி குறித்து சரியான நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று கடந்த மாதம் கூறியிருந்தார்.

SCROLL FOR NEXT