வாங்கிய கடனை திருப்பி செலுத்த வசதி இருந்தாலும், திருப்பி செலுத் தாத நபர்கள் பங்குச்சந்தையில் இருந்து நிதி திரட்ட `செபி’ அனுமதி மறுத்திருத்திருக்கிறது பங்குச் சந்தையில் இருந்து நிதி திரட்டுவது, கடன் சந்தையில் இருந்து நிதி திரட்டுவது, பட்டியலிடப்பட்ட நிறுவ னங்களில் இயக்குநர் குழுவில் இருப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைக்கும் `செபி’ தடை விதித்திருக்கிறது.
தவிர இவர்கள் மியூச்சுவல் பண்ட் மற்றும் புரோக்கிங் நிறுவனங் கள் தொடங்கவும் தடை விதிக்கப்பட் டிருக்கிறது. பட்டியலிடப் பட்ட நிறுவனத்தில் எந்த பொறுப்பும் எடுத்துக்கொள்ள முடியாது என்று `செபி’ தெரிவித்திருக்கிறாது.
`செபி’-யின் இந்த உத்தரவால் தொழிலதிபர் விஜய் மல்லையா தான் வகித்து வரும் பல பொறுப் புகளில் இருந்து விலக வேண்டி இருக்கும்.
சமீபத்தில் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து மல்லையா விலகினார். இருந்தாலும் அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் அவர் தொட ருவார் என்று அறிவிக்கப்பட்டிருக் கிறது.
தவிர இதர இந்திய நிறுவனங் களின் இயக்குநர் குழுவிலும் விஜய் மல்லையா இருக்கிறார். இந்த அனைத்து பொறுப்புகளில் இருந் தும் விஜய் மல்லையா ராஜிநாமா செய்ய வேண்டி இருக்கும்.
`செபி’-யின் இயக்குநர் குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. விரைவில் இந்த விதி அரசாணை யாக வெளியிடப்படும், இந்த விதி அமலுக்கு வந்தவுடன் இயக்குநர் குழு உள்ளிட்ட அனைத்தில் இருந்து பதவி விலக நேரிடும் என்று கூறிய சின்ஹா தனிப்பட்ட நபர்கள் குறித்து கருத்து கூற மறுத்துவிட்டார்.
மேலும் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். முதலீட்டின் மீது கிடைக்கும் லாபத்தை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொள்ள கூடாது. கடன் பத்திரத்தின் தரத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்று சின்ஹா கூறினார்.
பிஎஸ்இ பட்டியலிட செபி அனுமதி
பிஎஸ்இ பொதுப்பங்கு (ஐபிஓ) வெளியிட பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான `செபி’ கொள்கை அளவில் அனுமதி வழங்கியுள்ளது. நீண்ட காலமாக ஐபிஓ வெளியிட இந்த நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. ஆனால் தேவையான அனுமதி கிடைக்காததால் ஐபிஓ வெளியாவதில் கால தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஐபிஓ வெளியிட கொள்கை அளவில் பிஎஸ்இ-க்கு அனுமதி வழங்குவதாக `செபி’ தலைவர் யூ.கே.சின்ஹா தெரிவித்தார்.
தங்களுடைய எக்ஸ்சேஞ்சில் வெளியிட அனுமதிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, `செபி’ விதிமுறைகள் தெளிவாக உள்ளன. வேறு எக்ஸ்சேஞ்சில் மட்டுமே பட்டியலிடமுடியும் என்பதால் இந்த கேள்வியே தேவையற்றது என்று சின்ஹா பதில் அளித்தார். பிஎஸ்இ மற்ற எக்ஸ்சேஞ்சில் பட்டியலிட முடிவெடுத்தாலும், என்எஸ்இ மற்ற எக்ஸ்சேஞ்சில் பட்டியலிட தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஐபிஓவுக்காக எடில்வைஸ் பைனான்ஸியல் சர்வீசஸ் நிறுவனத்தை மெர்ச்சன்ட் வங்கியாளராக பிஎஸ்இ நியமனம் செய்திருக்கிறது. `செபி’ அனுமதி காரணமாக பிஎஸ்இ முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை வெளியே எடுக்கும் சூழல் உருவாகி உள்ளது.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் `செபி’-யிடம் விண்ணப்பித்தது பிஎஸ்இ. இப்போது `செபி’ அனுமதி வழங்கி நிலையில் இன்னும் 6 முதல் 9 மாதங்களில் ஐபிஓ வெளியிடப்படும் என்று பிஎஸ்இ செய்தி தொடர்பாளர் கூறினார். தவிர `செபி’ விதிமுறைகள்படி மற்ற எக்ஸ்சேஞ்சில் பிஎஸ்இ பங்குகள் பட்டியலிடப்படும் என்றும் அவர் கூறினார்.