வணிகம்

அரசியல் குறுக்கீடுகள் குறைந்தால் நாட்டின் வளர்ச்சி 7.75% மேல் அதிகரிக்கும்: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

செய்திப்பிரிவு

அரசியல் குறுக்கீடுகள் குறைந் தால் நாட்டின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்க்கப்படும் 7.75 சதவீதத் துக்கும் கூடுதலாக இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

இந்திய தொழில்துறை தலைவர் களுடன் பட்ஜெட்டுக்கு பிந்தைய விவாதத்தில் பங்கேற்று பேசிய ஜேட்லி மேலும் கூறியது: எங்க ளால் எடுக்க முடிந்த அனைத்து முயற்சிகளையும் இந்த பட்ஜெட் மூலம் எடுத்துவிட்டோம். வரும் நிதி ஆண்டில் அரசியல் குறுக்கீடுகள் இல்லாது இருந்தால் அதிக அளவில் சீர்திருத்தங்களை செயல் படுத்த முடியும். மேலும் பொருளா தார ஆய்வறிக்கையில் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்கை 7% - 7.75%) விட கூடுதலான வளர்ச்சியை நிச்சயம் எட்ட முடியும் என நம்புகிறோம்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா மற்றும் திவால் மசோதா ஆகியன நாடாளு மன்றத்தில் நிலுவையில் உள்ளன. இவற்றை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும் பொருளாதார சீர்திருத் தங்களை மேற்கொள்ளும் அதே வேளையில் வளர்ச்சியை எட்டுவ தற்கு திட்டங்களுக்கான அரசின் முதலீடுகள் அதிகரிக்கப்பட் டுள்ளன. இருப்பினும் பற்றாக்குறை யைக் கட்டுப்படுத்துவது என்ற இலக்கில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்படவில்லை.

அரசின் முதலீடுகள் அதிகரிக்கும்போது உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் முதலீடு கள் வருவதற்கான வாய்ப்பு அதிக ரிக்கும். வளர்ச்சி அதிகரிக்கும் போது பற்றாக்குறை யைக் கட்டுப்படுத்தாவிடில் விரை வாக வளரும் பொருளாதார நாடாக இந்தியாவைக் கருத மாட்டார்கள்.

சமையல் எரிவாயு, கெரசின், உணவு மற்றும் உரத்துக்கான மானிய ஒதுக்கீடு மிகப் பெரும் சவாலாகும். 2016-17 பட்ஜெட்டில் மானிய ஒதுக்கீடு கணிசமாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் பற்றாக்குறையை 3.5 சதவீதத் துக்குள் கட்டுப்படுத்த முடியும் என்றார் ஜேட்லி.

நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பற்றாக்குறை ஒட்டுமொத்த உள் நாட்டு உற்பத்தியில் 3.9 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

8% வளர்ச்சி சாத்தியம்

ஜிஎஸ்டி மற்றும் திவால் மசோதாவை விரைவாக நிறை வேற்ற அரசு தீவிர முயற்சி மேற்கொள்ளும். நிதி சீர்திருத் தங்கள் மூலம் வரும் நிதி ஆண்டில் 8 சதவீதத்துக்கும் கூடுத லான வளர்ச்சியை எட்ட முடியும் என்று பொருளாதார விவகாரங் களுக்கான துறையின் செயலர் சக்தி காந்த தாஸ் கூறினார்.

முதலீட்டுக்கான சூழலை உருவாக்குவது கிராமப்புற கட்ட மைப்பு வசதிகளை ஏற்படுத்தி உள்நாட்டில் ஸ்திரமான தேவையை ஏற்படுத்துவதன் மூலம் வளர்ச்சி இலக்கை எட்ட முடியும் என்று அவர் மேலும் கூறினார். உத்தி சார் அடிப்படையில் மேற்கொள்ளப் படும் விற்பனை மூலம் ரூ. 20,500 கோடியைத் திரட்ட நடவடிக்கை கள் எடுக்கப்படும். பொதுத்துறை வங்கிகளுக்குத் தேவையான முதலீடுகளை அரசு செய்யும் என்று குறிப்பிட்ட அவர் ரூ. 19.8 லட்சம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது ரூ.6 ஆயிரம் கோடி அல்லது ரூ.7 ஆயிரம் கோடியைத் திரட்டுவது அரசுக்கு பெரும் சவாலாக இருக்காது என்றார் சக்திகாந்த தாஸ்.

SCROLL FOR NEXT