ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்ச ரவை நியமன குழு (ஏசிசி) இவரை நியமனம் செய்துள்ளது. அதேபோல குஜராத் மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் சுதிர் மன்கட்டும் பகுதி நேர இயக்கு நராக நான்கு வருடங்களுக்கு நியமனம் செய்யப்பட்டிருக் கிறார்.
இவர் கடந்த ஏப்ரல் 2005-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 2007-ம் ஆண்டு வரை குஜராத் மாநில அரசின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தார். அப்போது குஜராத் மாநில முதல்வராக நரேந்திர மோடி இருந்தது குறிப்பிடத்தக்கது.