உலக அளவில் பிரபலமான இருசக்கர வாகன நிறுவனமான அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் தனது தொழிலை இந்தியாவின் இரண்டாம் நிலை நகரங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இரண்டாம் நிலை நகரங்களிலும் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளுக்கு சிறந்த வரவேற்பு இருக்கும் என எதிர்பார்ப்பதாக நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவில் 2010ல் சில்லரை வர்த்தக நடவடிக்கைகளுக்கு நிறுவனம் இறங்கியது. இதுவரை 12 ஆயிரம் ஹார்லி டேவிட்சன் பைக்குகளை விற்பனை செய் துள்ளது என்று நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் விக்ரம் பவா தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் கலாச் சாரத்தில் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் வெற்றிக்கு பின்னால் மிகப்பெரிய வரலாறு உள்ளது என்று விநியோகஸ்தர் அறிமுக விழா நிகழ்ச்சிக்கு பிறகு பவா குறிப்பிட்டார்.
ஐகானிக் பைக் சந்தையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் 65 சதவீதத்துக்கும் மேற்பட்ட சந்தையை வைத்துள் ளது. இந்த வளர்ச்சிக்கு ஏற்ப எங்களது விநியோகஸ்தர்கள் எண்ணிக்கையை நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களுக்கும் விரிவுபடுத்திச் செல்கிறோம் என்று கூறினார்.
இந்திய சாலைகளுக்கு ஏற்ப குறைந்த சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை அறிமுகப் படுத்தலாமே என்கிற கேள்விக்கு, அப்படி ஒரு திட்டமில்லை. மேலும், நிறுவனம் தென்னிந்திய சந்தை மிக முக்கியமானதாகக் கருதுகிறது. என்று குறிப்பிட்டார்.