வணிகம்

இந்திய இ-காமர்ஸ் துறையில் அலிபாபா

பிடிஐ

சீனா இ-காமர்ஸ் துறையின் முக்கிய மான நிறுவனமான அலிபாபா நடப்பு நிதி ஆண்டில் இந்தியா வில் களம் இறங்க திட்டமிட்டிருக் கிறது. இதற்காக நிறுவனம் அனைத்து விதமான வாய்ப்புகளை யும் ஆராய்ந்து வருவதாக தெரிவித் திருக்கிறது.

இது தொடர்பாக அலிபாபா நிறுவனத்தின் சர்வதேச நிர்வாக இயக்குநர் கே. குரு கவரப்பன் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசி யுள்ளார். தற்போது இ-காமர்ஸ் மற்றும் பேமென்ட் நிறுவனங்களில் அலிபாபா முதலீடு செய்திருந்தாலும் இ-காமர்ஸ் நிறுவனம் தொடர்பான உத்தியை இந்த வருடத்துக்குள் அறிவிப்போம் என்றார்.

அமைச்சர் ரவி சங்கர்பிரசாத் கூறும்போது, அலிபாபா இந்தியாவில் நிறுவனம் தொடங்க எந்தத் தடையும் இல்லை என்று கூறியிருக்கிறேன். விரைவில் இந்த நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய செயல்பாடுகளை இந்தியாவில் விரிவுப்படுத்தும் என்று நம்புகிறேன் என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT