நாம் பணிக்குச் செல்லும் போது பணியை மட்டும் செய்வ தில்லை. பணிகளை மேற்கொள்ளும் போது சில கூட்டல் கழித்தல்கள் ஏற்படுகின்றன. அவை சில நேரங்களில் நன்மையானதாகவும் சில நேரங்களில் தீமை தரத்தக்கதாக இருக்கும். பொது வாக பணியில் வேண்டும் என்றே சிறுமைபடுத்தப்படுவதும், நோக செய் வதும், எள்ளி நகையாடுவதும் (The Asshole rule) அதிகமாக இருப்பதும், குறைவாக இருப்பதும் மேலதிகாரியை பொருத்ததே. கணக்கில் அடங்காத பணி தொடர்பான சிறுமை படுத்தும் நிகழ்ச்சிகள் ஒரே ஒரு இடத்தில்தான் மையம் கொள்ளும் அதுதான் மேலதிகாரி.
SUTTON என்ற நூலாசிரியர் கணக் கிலடங்கா நிகழ்வுகளை தொகுத்து நல்ல மேலதிகாரி யார் அவருடன் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்றும் கெட்ட மேலதிகாரியை அறிந்து கொள்ளவும், கண்டு கொள்ளாமல் போவதற்கும் ஆன உத்திகளை விளக்க மாக தெரிவிக்கின்றார். புளோரிடா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப் பட்ட ஒரு ஆய்வு முடிவில் கெட்ட மேலதி காரிகள் 30% தேவையில்லாத வேலை களையும், தவறான முறையில் வேலை செய்வதையும், வேண்டுமென்றே தவ றான முறையில் பணியாற்றுவதையும் தூண்டி விடுகின்றார்கள். நம்பிக்கை இல்லாத, திட்டுகின்ற மேலதிகாரிகளை பணியாளர்கள் தவிர்க்கிறார்கள்.
விண்ணை முட்டும் இலக்கை எட்டினாலும், பரிசு பாராட்டு மழைகளில் மூழ்கி எழுந்தாலும், செயற்கரிய சாதனைகளைச் செய்தாலும் உடன் பணிபுரிபவர்களை மோசமாக நடத்தும் எந்த மேலதிகாரியும் சிறந்தவர் என்றும், சாதனையாளர் என்றும் போற்றப்படுவதில்லை. நல்ல மேலதிகாரி என்று குறிப்பிடுவது மிக சிறந்த மேலதிகாரியையே ஆகும். திறமை இல்லாத சாதாரணமான மேலதிகாரியை பற்றி எந்த குறிப்பையும் நூலாசிரியர் குறிப்பிடவில்லை. மாறாக, கீழே குறிப்பிடும் ஐந்து முக்கியமான நம்பிக்கைகளையும், மனப்பாங்குகளையும் பெற்று இருக்க கூடிய ஒருவர் நிச்சயம் மிக சிறந்த மேலதிகாரியாக இருப்பார் என்ற ஆழ்ந்த கருத்துகளை வெளிப்படுத்து கிறார்.
லசோர்டாஸ் விதி
இந்த லசோர்டாஸ் விதி என்பது மிக அதிகமான மற்றும் மிக குறை வான கட்டுபாடுகளைத் தவிர்த்து மிக சரியான நடுநிலையான கட்டுப்பாடு களை மேற்கொள்ளுவது ஆகும், உதாரணமாக, ஒரு புறாவை மிகவும் அழுத்திப் பிடித்தால் அது கூடிய விரைவில் மாண்டு விடும். அதே போல அந்த புறாவை மிகவும் லேசாக கையாண்டால் பறந்து விடும். இந்த இரண்டு நிகழ்விலும் இழப்பு புறாவை கையில் வைத்திருப்பவருக்குதான். ஒரு சிறந்த மேலதிகாரி பணியாளர்களை புறாவைப் போல கையாள வேண்டும், இல்லை என்றால் இழப்பு யாருக்கு? இன்னும் சொல்லப் போனால் ஒரு சிறந்த ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களை மிகவும் கட்டுப்படுத் தாவோ, கண்டுகொள்ளா மலோ விட்டு விடுவதில்லை, மாறாக வழிகாட்டி திருத்தி ஒழுக்கத்தை ஊட்டி விடுபவர் சிறந்த ஆசிரியர் ஆகின்றார். ஒரு நல்ல மேலதிகாரியும் அதே போல தான்.
நிதானத்தை நாடு
சிறந்த மேலதிகாரிகள் பணியாளர் களை மராத்தான் ஓட்டத்திற்கு தயார் செய்ய வேண்டுமே தவிர நூறு மீட்டர் ஓட்டத்திற்கு தயார் படுத்தக் கூடாது. மிக சிறந்த மேலதிகாரிகள் அவசர கால நிலையை அறிவிக்கக் கூடாது மாறாக, அவசர கதியில் பணியாற்றக் கூடிய இயல்பை விதைக்க வேண்டும். எப்போதும் அவசர கதியில் இயங்கும் மேலதிகாரிகள் தானும் வீழ்ந்து பணியாளர்களையும் குழியில் தள்ளி விடுகின்றனர்.
சின்ன சின்ன வெற்றிகள்
நீண்ட கால சாதனைகளுக்கு சின்ன சின்ன வெற்றிகள் படிக்கட்டுகளாகும். சிறந்த மேலதிகாரிகள் சின்ன சின்ன வெற்றிகளை நோக்கி பணியாளர்களை நகர்த்துவார்கள். வாத்தின் வயிற்றுக்குள் கையை விட்டு தங்க முட்டையை பிடுங்கி எடுக்க மாட்டார்கள். மிக சிறந்த மேலதிகாரிகள் பெரிய பணியை சிறு பங்குகளாக பகிர்ந்து, தாங்கக் கூடிய அளவிற்கு வடிவமைத்து பணியாளர்கள் பளுவை உணராத வண்ணம் பணிகளை எளிதில் செய்து முடிக்கச் செய்வர்.
மறதியை மறத்தல்
பல்வேறு வகையான பணிக் காரணி களால் மேலதிகாரிகள் பணியாளர் களுக்கு என்ன வேண்டும், எப்படி சொல்வது, எதை செய்யச் சொல்லுவது குழப்பத்தில் இருப்பார்கள். அது போன்ற நேரங்களில் பணியாளர்களுடன் ஒவ்வொரு வார்த்தையும் கூர்ந்து கவ னித்து, ஒவ்வொரு செயலையும் முறை யாக செய்து முடிக்கப் பழக்குதல் அவசியம். மேலதிகாரி என்ன செய்வார் எப்படி செய்வார் என்ற உத்திகளை மற்றவர்கள் அறிந்துகொள்ளும் வண் ணம் திறந்த புத்தகங்களாக செயல் பட வேண்டும். எந்த நிகழ்விலும் மறதியினால் செய்யக் கூடாத செயல் களை செய்து மேலதிகாரிகளுக்கு பின்ன டைவு ஏற்படுத்தும் பணியார்களை சரிவ ரக் கண்டறிந்து களைநீக்கியும், முறை யான பயிற்சியும் அளிக்க வேண்டும்.
காக்க காக்க
மிக சிறந்த மேலதிகாரிகள் பணியாளர்களை பாதுகாத்தும் அவர்க ளுக்காக போராடியும், அவர்களை நல்ல முறையில் பணியாற்றச் செய் வார்கள். சில நேரங்களில் மோசமான விளைவுகளை சுமந்து கொண்டு பணியாளர்களுக்கு பாதுகாப்பு வளை யத்தை ஏற்படுத்தி நம்பிக்கையை கூட்டுவார்கள்.
சிறந்த மேலதிகாரிகள் பணியாளர் களின் இரத்த ஓட்டத்தையும், எண்ணங் களையும் எளிதில் அறிந்து கொள்ளு வார்கள். பணியாளர்கள் என்ன நினைக்கி றார்கள், எவ்வாறு உணர்கிறார்கள், எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை பற்றி முழுமையாக அறிந்து இருப்பார்கள். பணியாளர்களின் பயனுக்காக பாடுபடுவார்கள். தன்னை பற்றியும், மற்றவர்களைப் பற்றியும் வலிமையையும் மற்றும் பலவீனங்களையும் பற்றி உணர்ந்தவர் களாகவும், வெட்டிய குழியை தாண்டி வருவதில் வீரர்களாகவும், சதிகளையும் நிறுவன அரசியலையும் தீர்த்து வைப்பவர்களாகவும் இருப்பார்கள். சிறந்த மேலதிகாரியாக மாறுவது ஒரு நாளில் நடக்கும் செயல் அல்ல. இதில் ஏதும் மாய மந்திரங்கள் நிகழ்வது கிடையாது. அவ்வாறு யாராவது கூறினால் அவர்கள் அறியாதவராகவும், ஏமாற்றுக்காரர்களாகவும் மட்டுமே இருப்பார்கள்.
சிறந்த மேலதிகாரியாக மாறுவதற்கு சர்வ ரோக நிவராணி ஏதும் கிடை யாது. மாறாக, மேற்சொன்ன வழிக ளில் விழுந்து, எழுந்து, உணர்ந்து, சிறந்து செயல்பட்டால் வெற்றிகரமான மேலதிகாரியாக மாறலாம். வெற்றிக்கு நேரம், திறன் இவைகளை செலவழிப்ப தைத் தவிர பணியாளர்களின் உணர்வுகளையும் செயல்களையும் சேர்த்து எடுத்து, புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுதல் வெற்றிக்கு வழிகாட்டும்.
மேலதிகாரி நல்லவரா கெட்டவரா என்பதற்கு கீழ் காணும் கேள்விகள் பொருத்தமாக அமையும். நல்ல மேலதிகாரி தன்னுடைய பணியில் முனைப்பை காட்டி தினந்தோறும் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதை பற்றி விவரிக்கும் கேள்விகள் வருமாறு.
உங்களிடம் பணிபுரிவதை மற்றவர்கள் விரும்புகிறார்களா?
ஒரு மாற்றத்திற்கு பிறகு மீண்டும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால் எத்தனை பேர் உங்களிடம் மீண்டும் பணியாற்றுவார்கள்?
நீங்கள் உங்களுக்காக வேலை செய்கிறீர்களா அல்லது மற்றவர்களை திருப்தி படுத்தவும் மகிழ்ச்சி அடையவும் பணியாற்றுகிறீகளா?
நீங்கள் உங்களுக்காக பணியாற்றும் பொழுது உங்களுக்கு என்ன தேவை என்பதை உணர்கிறீர்களா?
இந்த கேள்விகளை முதலில் படித்து பெரும்பான்மையானவர்கள் ஆம் என்ற பதிலைக் கொடுத்தால் சிறந்த மேலதிகாரி என்ற முகட்டிற்கு செல்கிறீர்கள் என்று பொருள்.
எள்ளிநகையாடும், நல்ல மற்றும் கெட்ட மேலதிகாரிகள் எவ்வாறு செயல் பட வேண்டும் என்பதை பற்றி வலிமை யான கதைகள் மூலமும், ஆய்வு முடிவு கள் மூலமும் பணியாளர்களின் பங்களிப் பை பற்றியும் அவற்றின் வெற்றி தோல்விகளை பற்றியும் மிக தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஒரு மந்திர மருந்தோ விரைவான தீர்வுகளோ, உடனடியாக வந்து சேரும் மிக சிறந்த மேலதிகாரியாக உருமாற முடியம் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் இந்த புத்தகத்தை நினைத்து கூட பார்க்க வேண்டாம். உங்கள் ஆழ் மனதின் எண்ண ஓட்டங்களையும், உங்களை பற்றிய அறிதலையும் இணைத்து அவைகளின் செழுமையான ஓட்டத்தில் சிறந்த மேலதிகாரியாக மாற முயற்சிக்கும் ஒவ்வொருவரும் இந்த புத்தகத்தைக் கட்டாயம் படிக்க வேண்டும்.
rvenkatapathy@rediffmail.com