ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த அப்ராஜ் நிறுவனத்திடம் இருந்து 15 கோடி டாலர் நிதி திரட்டியது பெங்களூருவைச் சேர்ந்த பிக் பாஸ்கட் நிறுவனம். பிக் பாஸ்கட் நிறுவனம் ஆன்லைன் மூலம் மளிகைப் பொருட்களை விற்கும் நிறுவனமாகும்.
ஹீலியன் அட்வைசர்ஸ், ஜோடியஸ் கேபிடல், ஆக்சென்ட் கேபிடல், பெஸேமெர் வென்ச்சர் பார்ட்னர்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்கெனவே இந்திய நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கின்றன.
அப்ராஜ் நிறுவனம் 2006-ம் ஆண்டு முதல் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது கடந்த ஐந்து மாதங்களில் இந்தியாவில் செய்யப்படும் மூன்றாவது முதலீடு பிக்பாஸ்கட் ஆகும். கேர் ஹாஸ் பிட்டல் நிறுவனத்திலும் அப்ராஜ் குழுமம் முதலீடு செய்திருக்கி றது. பிக் பாஸ்கட் நிறுவனம் 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பெங்களுரூவைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் 8 மெட்ரோ நகரங் களிலும், 10 இரண்டாம் கட்ட நகரங்களிலும் செயல்பட்டு வருகி றது. 19,000 பொருட்களை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் இந்த இணையதளத்தில் 10 லட்சத்துக்கும் மேலான ஆர்டர்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன. கடந்த 18 மாதங்களில் ஐந்து மடங்கு விற்பனை உயர்ந்துள்ளது.
தற்போது கிடைத்திருக்கும் நிதியை ஏற்கெனவே உள்ள சந்தையிலும், இந்தியாவில் உள்ள மேலும் பல நகரங்களுக்கு விரிவாக்கம் செய்ய பயன் படுத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
அப்ராஜ் குழுமம் ஆசியாவில் 10 வருடங்களுக்கு மேலாக இருக்கிறது. 140 கோடி ரூபாயை இந்த பிராந்தியத்தில் முதலீடு செய்திருக்கிறது. ஹெல்த்கேர், நிதிச்சேவைகள், லாஜிஸ்டிக்ஸ், கன்ஸ்யூமர் கூட்ஸ், உணவு உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்திருக்கிறது இந்த நிறுவனம்.