இந்திய பொருளாதாரம் வரும் நிதி ஆண்டில் (2016-17) 7.2 சதவீத அளவுக்கு இருக்கும் என்று பிஎம்ஐ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. மத்திய புள்ளியியல் அலுவலக முன்கூட்டிய மதிப்பீடு 7.6 சதவீத அளவுக்கு இருக்கும் என தெரிவித் துள்ளது. ஆனால் பிஎம்ஐ ஆய்வ றிக்கை அதைவிடக் குறைவாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
2016-ம் நிதி ஆண்டில் இந்தியா வின் வளர்ச்சி 7.3 சதவீதமாகவும், 2015-ம் நிதி ஆண்டில் 7.2 சதவீதமாகவும் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இருக்கும் என முன்பு கணித்திருந்தது. அந்த அடிப்படையில் வரும் நிதி ஆண்டில் வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளதாக பிஎம்ஐ தெரிவித்துள்ளது.
இந்திய பொருளாதாரம் பன்முக சவால்களை எதிர்நோக்கியுள்ளது. தொழில்துறை உற்பத்தி, வர்த்தகம் ஆகியவை தொடர்பான விவரங்கள் இறங்குமுகத்தில் இருப்பதால் வளர்ச்சியும் குறைவாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
தனியார் முதலீடுகள் குறைந்து வருவது மற்றும் வெளிப்புறச் சூழல் ஆகியன வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும். இதனடிப்படையில் ஜிடிபி 7.2 சதவீத அளவுக்கே இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
மத்திய புள்ளியியல் அலுவல கம் வரும் நிதி ஆண்டில் வளர்ச்சி 7.6 சதவீத அளவுக்கு இருக்கும் என தெரிவித்துள்ளது. இது தொடர்பான முன்கூட்டிய மதிப் பீட்டு அறிக்கையை கடந்த பிப்ரவரி மாதம் சிஎஸ்ஓ வெளியிட்டது.
கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையின் புள்ளி விவரமும் பிஎம்ஐ அறிக்கையோடு ஒத்துப் போகவில்லை. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆய்வறிக்கை தகவலின்படி வரும் நிதி ஆண்டில் 7 சதவீதம் முதல் 7.5 சதவீத அளவுக்கு வளர்ச்சி இருக்கும் என தெரிவித்திருந்தது. அத்துடன் அடுத்த சில ஆண்டுகளில் 8 சதவீத வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
இருப்பினும் உலக பொருளா தார தேக்க நிலை நீடிக்கும் பட்சத்தில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் பொருளாதார ஆய்வறிக்கை எச்சரித்திருந்தது.
ஜப்பான் நிதிச்சேவை நிறுவனமான நொமுரா தனது ஆய்வறிக்கையில் இந்தியாவின் வளர்ச்சி வரும் நிதி ஆண்டில் 7.8 சதவீத அளவுக்கு இருக்கும் என தெரிவித்திருந்தது.
மோடி தலைமையிலான அரசு பல்வேறு பொருளாதார சீர்திருத் தங்களை செய்து வருகிறது. அந்த அடிப்படையில் வளர்ச்சிக்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்ப தாக பிஎம்ஐ கருதுவதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.
மானியத்தைக் குறைக்க ஜன்தன், ஆதார், மொபைல் எண் உள்ளிட்டவை மூலமாக நட வடிக்கை எடுத்து வருகிறது. அரசு எடுக்கும் இதுபோன்ற சிறு சிறு நடவ டிக்கைகள் மானியம் வழங்கு வதில் உள்ள கசிவுகளைக்களை யும். இதனால் நீண்டகால அடிப் படையில் செலவு குறையும் என்று பிஎம்ஐ அறிக்கை தெரிவிக்கிறது.
நாட்டின் பணவீக்கம் மைனஸ் நிலையில் இருப்பது, அரசு செலவைக் கட்டுப்படுத்த முயற்சி எடுத்து வருவது உள்ளிட்ட நடவடிக் கைகளோடு ரிசர்வ் வங்கியும் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வட்டிக் குறைப்பு நடவடிக்கையை எடுக்கும் என எதிர்பார்ப்பதாக பிஎம்ஐ தெரிவித்துள்ளது.
2017 நிதி ஆண்டு இறுதிக்குள் வட்டி விகிதம் 6.25 சதவீத அளவுக் குக் குறைக்கப்படலாம் என எதிர்பார்ப்பதாக பிஎம்ஐ தெரிவித் துள்ளது. ஏப்ரல் மாதத்தில் குறைந்தபட்சம் 0.25 சதவீதம் குறைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் பிஎம்ஐ தெரிவிக் கிறது.