கடந்த ஆண்டு கிரிப்டோகரன்சி வர்த்தகம் தொடர்பாக ரிசர்வ்வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையைக் கண்டித்ததோடு, கிரிப்டோகரன்சி வர்த்தகத்தின் மீதான தடையையும் நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகுடிஜிட்டல் கரன்சி வர்த்தகம் இந்திய முதலீட்டாளர்கள் குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. பிட்காயின் உட்பட கிரிப்டோ கரன்சிகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகின்றன.
முதலீட்டாளர்களை மனதில் வைத்து, இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் சந்தை கட்டுப்பாட்டாளர் செபியும் கவலை தெரிவித்து வந்தன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்காக புதிய மசோதா கொண்டு வரப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, பரிவர்த்தனைகளுக்கு அல்லது பணம் செலுத்துவதற்கு கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்துவதை மத்திய அரசு தடை செய்யலாம் என்றும் சில வகையான வரன்முறைப்படுத்தும் நடவடிக்கைகள் இருக்கலாம் எனத் கூறப்படுகிறது.
கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி ஒழுங்குமுறை மசோதா 2021 என்ற பெயரில் இந்த மசோதா உருவாக்கப்படுகிறது. தொடர்ந்து இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக டிஜிட்டல் கரன்சி உருவாக்கும் திட்டமாகவும் இந்த மசோதா இருக்கும் எனத் தெரிகிறது.
இந்தநிலையில் உலக நாடுகள் பலவற்றிலும் கிரிப்ட்டோகரன்சி வரன்முறைப் படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் கட்டுப்பாடுகளும் உள்ளன.
இந்த நாடுகளில் பெரும்பாலானவை கிரிப்டோகரன்சிகளை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், இந்த டிஜிட்டல் யூனிட்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மதிப்பை அவை அங்கீகரிக்கும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இந்தியாவைப் போலவே, பல நாடுகளும் தங்கள் மத்திய வங்கியின் ஆதரவுடன் டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்ததும் நடவடிக்கையை நோக்கி நகர்ந்து வருகின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள பியட் நாணயத்தின் டிஜிட்டல் வடிவமாகும், இது பிளாக்செயின் ஆதரவுடன் பரிவர்த்தனை செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. மற்ற நாடுகள் கிரிப்டோகரன்சியை எவ்வாறு கையாளுகின்றன என்பதை பார்க்கலாம்.
கனடா:
கிரிப்டோவை ஆரம்பகாலத்தில் ஏற்றுக்கொண்ட நாடுகளில் கனடாவும் இருந்தது. கனடா வருவாய் ஆணையம் பொதுவாக நாட்டின் வருமான வரிச் சட்டத்தின் நோக்கங்களுக்காக கிரிப்டோகரன்சியை ஒரு பொருளாக கருதுகிறது.
ஒரு நாணயம் முதலீட்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடிய மதிப்பின் டிஜிட்டல் பிரதிநிதித்துவம் மற்றும் அது நிதிகளுக்காக அல்லது நிதிக்காக உடனடியாகப் பரிமாறிக்கொள்ளக்கூடிய மெய்நிகர் நாணயத்திற்காக உடனடியாகப் பரிமாறிக்கொள்ளலாம்.
இஸ்ரேல்
நிதிச் சேவைகள் சட்டத்தின் மேற்பார்வையில், நிதிச் சொத்துகளின் வரையறையில் மெய்நிகர் நாணயங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இஸ்ரேலிய செக்யூரிட்டி ரெகுலேட்டர் கிரிப்டோகரன்சி ஒரு பாதுகாப்பு பொருள் என்று கருதுகிறது.
அதே நேரத்தில் இஸ்ரேல் வரி ஆணையம் கிரிப்டோகரன்சியை ஒரு சொத்தாக வரையறுத்து அதன் மூலதன ஆதாயத்தில் 25 சதவீதத்தை வரியாக நிர்ணயித்துள்ளது.
ஜெர்மனி
ஜெர்மனி நிதி மேற்பார்வை ஆணையம் மெய்நிகர் நாணயங்களை கணக்கின் அலகுகளில் தகுதிப்படுத்துகிறது. ஒரு கிரிப்டோ டோக்கன் என்று கருதுகிறது. ஏனெனில் கிரிப்ட்டோ என்பது நாணயம் போல இது பரிவர்த்தனைக்கு பயன்படுவதில்லை.
குடிமக்களும் சட்டப்பூர்வ நிறுவனங்களும் கிரிப்டோஅசெட்களை வாங்கலாம் அல்லது வர்த்தகம் செய்யலாம், அவர்கள் அதை பரிமாற்றங்கள் மற்றும் ஜெர்மன் ஃபெடரல் ஃபைனான்சியல் மேற்பார்வை ஆணையத்தில் உரிமம் பெற்ற பாதுகாவலர்கள் மூலம் மட்டுமே இதுனை செய்யலாம்.
பிரிட்டன்
கிரிப்டோ சொத்துக்களை நாணயமாகவோ அல்லது பணமாகவோ கருதவில்லை, கிரிப்டோகரன்சிகளுக்கு ஒரு தனித்துவமான அடையாளம் உள்ளது, எனவே, வேறு எந்த வகையான முதலீட்டு செயல்பாடு அல்லது கட்டண முறையுடன் நேரடியாக ஒப்பிட முடியாது என பிரிட்டனில் வரையறுக்கப்படுகிறது.
அமெரிக்கா
அமெரிக்காவில் வெவ்வேறு மாகாணங்களில் கிரிப்டோகரன்சிகளுக்கு வெவ்வேறு வரையறைகள் மற்றும் விதிமுறைகள் உள்ளன. அமெரிக்காவின் பெடரல் அரசு கிரிப்டோகரன்சிகளை சட்டப்பூர்வ டெண்டராக அங்கீகரிக்கவில்லை. எனினும் மாகாணங்களால் வழங்கப்பட்ட வரையறைகள் மெய்நிகர் நாணயங்களின் பரவலாக்கப்பட்ட தன்மையை அங்கீகரிக்கிறது.
தாய்லாந்து
டிஜிட்டல் சொத்து வணிகங்கள் உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைக் கண்காணிக்கப்படும்.
இந்த மாத தொடக்கத்தில், தாய்லாந்தின் பழமையான சியாம் கமர்ஷியல் வங்கி, உள்ளூர் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் ஆன்லைனில் 51% பங்குகளை வாங்குவதற்கான நடவடிக்கையை அறிவித்தது.