வங்கிகளில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
குர்காவ்னில் நடைபெறும் கியான் சங்கம் (வங்கியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும்) இரண்டு நாள் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசிய தாவது: வங்கிகளின் நிதி வளத்தை மேம்படுத்தி அவற்றை பழைய நிலைக்குக்கொண்டு வருவதுதான் அரசின் முன்னுள்ள பிரதான விஷ யம். இதற்காக நிதி ஆதாரங்கள் திரட்டப்பட்டு வங்கிகளின் மூலத னத்தை அதிகரிக்க திட்டமிடப் பட்டுள்ளது. அதேசமயம் வங்கி களில் கடனைப் பெற்று திரும்பச் செலுத்தாதவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
வங்கிகளின் நிதி நிலை மேம்பட கூடுதல் நிதி தேவைப்பட்டால் அதற்குரிய வழிவகைகளை அரசு கண்டறியும். வங்கிகளில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காகத்தான் திவால் மசோதா கொண்டு வரப்பட உள்ளது. இதனால் வங்கிகள் அளித்த கடனை திரும்பப் பெற முடியும். மேலும் கடனை வசூலிக் கும் தீர்ப்பாயங்கள் இனி ஆன் லைன் நீதிமன்றங்களாக செயல் பட்டு வசூல் நடவடிக்கையை துரிதமாக்கவும் இந்த சட்டம் வழிவகுக்கும்.
கடன் வசூல் தீர்ப்பாயங்களை மிகவும் சிறப்பான வைகளாக செயல்படுத்த பல யோசனைகள் எங்களிடம் உள்ளன. சர்பாசி சட்டம், வங்கிகள், நீதிமன்ற குறுக்கீடுகள் இன்றி கடனை வசூலிக்கும் அதிகாரம் பெற்றவை யாக விளங்கும். பட்ஜெட்டில் குறிப்பிட்டபடி வங்கிகளை ஒருங்கி ணைப்பது தொடர்பாக ஒரு உயர் நிலை நிபுணர் குழு அமைக்கப்படும். இதற்கு முன்னு ரிமை அளிக்கப்படும். மிகவும் வலிமையான வங்கிகளை உரு வாக்க வேண்டும். அதை பலவீனப் படுத்தும் எந்த நடவடிக்கையும் அனுமதிக்க முடியாது என்று ஜேட்லி தெரிவித்தார்.
மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, கூறுகையில் வங்கிகளின் மொத்த கடன் அளவு ரூ. 8 லட்சம் கோடியாக உள்ளது. இதில் மறு சீரமைப்புக் கடன் மற்றும் வாராக் கடனும் (என்பிஏ) அடங்கும் என்றார்.இந்தத் தொகையில் எவ்வளவு வாராக் கடன் என்பதை வங்கிகள் தான் கணக்கெடுத்து மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.