நீர் சுத்திகரிப்பு மேலாண்மை உள்ளிட்ட பணிகளில் சர்வதேச அளவில் முன்னணியில் திகழும் விஏ டெக் வாபாக் நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த அரையாண்டில் ரூ.42 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் மிட்டல் கூறும்போது, “முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.19 கோடி. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.18.97 கோடியாகும். நிறுவனம் வசம் ரூ.10,040 கோடி பணிகளுக்கான ஆர்டர் கைவசம் உள்ளது.
அரையாண்டில் நிறுவனத்தின் வருமானம் 29 சதவீதம் அதிகரித்து ரூ.1,342 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் 90 சதவீதம் அதிகரித்துள்ளது.
இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ.25.93 கோடி. நிறுவனத்தின் வருமானம் ரூ.686 கோடி. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ.610 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடுகளால் தொடர்ந்து ஆர்டர்கள் கிடைப்பதால், தொழில்நுட்பம் மற்றும் சிறப்பான செயல்பாடுகளை நிறுவனம் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும்” என்று தெரிவித்தார்.