வணிகம்

புதிய உற்பத்தித்துறை நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 25 சதவீதமாக குறைப்பு

செய்திப்பிரிவு

நேற்று தாக்கல்செய்யப்பட்ட பட் ஜெட்டில் புதிய உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்களுக்கு கார்ப்ப ரேட் வரி 25 சதவீதமாக குறைக் கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் வகையிலும் தொழில்துறையை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த அறிவிப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.

2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், 5 கோடி ரூபாய்க்கு கீழே ஆண்டு பரிவர்த்தனை உள்ள சிறிய நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 30 சதவீதத்திலிருந்து 29 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மேலும் அருண் ஜேட்லி கூறியது; அடுத்த நான்கு ஆண்டு களில் கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக படிப்படியாக குறைக்கப் படும். இது அடுத்த நிதியாண்டில் இருந்து செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக கார்ப்பரேட் வரி தொடர்பாக இரண்டு விதமான மாற்றங்களை நான் முன்மொழிகிறேன்.

இந்த ஆண்டில் மார்ச் 1-ம் தேதிக்கு பிறகு தொடங்கப்படும் புதிய உற்பத்தித்துறை நிறுவனங்களுக்கு லாபம் ஏதும் இல்லையென்றால் அவர்கள் 25 சதவீத வரியை செலுத்தினால் போதுமானது. இது புதிய உற்பத்தித் துறை நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாவதை ஊக்குவிக்க உதவும். மேலும் 5 கோடி ரூபாய்க்கு கீழே ஆண்டு பரிவர்த்தனை உள்ள சிறுகுறு நிறுவனங்களுக்கு அடுத்த நிதியாண்டிற்கு கார்ப்பரேட் வருமான வரி 29 சதவீதமாக குறைக்கப்படும். இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT