ஏர் ஏசியா நிறுவனம் உள்நாடு மற்றும் சில வெளிநாட்டு பயணங் களுக்கு கட்டண சலுகையை அறி வித்துள்ளது. அக்டோபர் 1 முதல் 2017-ம் ஆண்டு மே 22 வரையான காலத்தில் பயணங்களை மேற் கொள்வதற்கு முன்பதிவு செய் வோருக்கு இந்த கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 7-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோருக்கு இந்த கட்டண சலுகை பொருந்தும்.
ஏர் ஏசியா மற்றும் ஏர் ஏசியா எக்ஸ் விமானங்கள் பயணிக்கும் வழித்தடங்களுக்கு முன் பதிவு செய்யலாம்.
உள்நாட்டில் பெங்களூரு, விசாகப்பட்டினம், குவஹாத்தி, கொச்சி, இம்பால், கோவா, டெல்லி ஆகிய பகுதிகளுக்கு பயணம் செய் வோர் முன் பதிவு செய்யலாம். உள் நாட்டு கட்டணம் ரூ. 1,099 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூரிலிருந்து கொச் சிக்கான விமானக் கட்டணம் ரூ.2,999 ஆகும். சென்னை மற்றும் ஹைதராபாதுக்கு இந்நிறு வனத்தின் குழும விமானமான ஏர் ஏசியா பெர்ஹாடில் பயணம் செய்ய முன் பதிவு செய்யலாம்.
இது தவிர, சென்னை, பெங்க ளூரிலிருந்து கோலாலம்பூருக்கு ரூ.3,999 பயண கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்விரு நகரங்களையும் தாய் ஏர் ஏசியா விமானம் இணைக்கிறது.